வடமராட்சி கிழக்கில் கடலட்டை பிடித்தவர்கள் நடுக்கடலில் வளைத்து பிடிக்கப்பட்டனர்!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பரப்பில் நேற்று இரவு 10.30 மணியளவில் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்துக்கொண்டிருந்த வெளிமாவட்ட மீனவர்கள் 9 பேரையும், அவர்களின் 3 படகுகளையும் கட்டைக்காடு மீனவர்கள் கடலில் வைத்தே மடக்கிப்பிடித்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கில் வெளிமாவட்ட மீனவர்கள் வந்து தங்கியிருந்து கடல்ட்டை பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். கடலட்டை பிடிப்பதற்கான அனுமதியை பெற்று, சட்டவிரோதமாக வாடி அமைத்து இந்த தொழில் ஈடுபடுகின்றனர்.

கடலிலிருந்து 5 கடல் மைல்களிற்கு அப்பாலேயே கடலட்டை பிடிக்கலாம். பகல் பொழுதில் மட்டுமே அதை செய்யலாம். இதை வெளிமாவட்ட மீனவர்கள் பின்பற்றுவதில்லை. இதையடுத்து உள்ளூர் மீனவர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர். இதையடுத்து கடலட்டை பிடிப்பவர்களை கைது செய்வதாக கடற்றொழில் நீரியல்வள திணைக்களம் அறிவித்திருந்தது.

ஆனால் அவர்கள் யாரையும் இதுவரை கைது செய்யவில்லை. நேற்று இரவு இரகசியமாக கடலட்டை பிடிக்க செல்வதை இரகசியமாக அறிந்த கட்டைக்காடு இளைஞர்கள்,கடலில் வைத்து கடலட்டை பிடிப்பவர்களை கையும் மெய்யுமாக வளைத்து பிடித்தனர். தற்போது கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ள அவர்கள் நீரியல் வளத்திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here