கர்நாடக பஸ் நடத்துனராக அரிய புகைப்படம்!


கே.பாலசந்தர் இயக்கத்தில் 1975-ல் வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான ரஜினிகாந்த், தனது ஸ்டைலான, மிரட்டலான, இயல்பான நடிப்புத் திறமையினால் ரசிகர்களில் மனதில் நீங்காத இடம்பிடித்து, சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இன்று வரை கொடிகட்டிப் பறந்து வருகிறார். நடிப்பதற்கு முன் ரஜினிகாந்த், கர்நாடகாவில் பேருந்து நடத்துனராக பணிபுரிந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 2020 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திலிருந்து அனிருத் இசையில் ‘சும்மா கிழி’ எனும் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் நேற்று வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்நிலையில், ரஜினியின் அரிய புகைப்படம் என்று ஒரு புகைப்படம் வைரலாகிவருகிறது. சீருடையில் இருக்கும் அந்த புகைப்படம், நடிகர் ரஜினி கர்நாடகத்தில் பேருந்து நடத்துனராக பணியாற்றியபோது எடுக்கப்பட்டது என இணையத்தில் பரப்பப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here