பாடசாலைக்குள் ஆசிரியையின் கையை பிடித்து இழுத்து வந்த அதிபர்: யாழில் அதிர்ச்சி சம்பவம்!

காரைநகர் பாடசாலையொன்றில் பதில் கடமைபுரியும் அதிபர் ஒருவர், பாடசாலை ஆசிரியையின் கையை பிடித்து எல்லை மீறிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கையை பிடித்து இழுத்ததும் அல்லாமல், அவரை துரத்தியும் சென்றுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் நேற்று நடந்தது.

இது தொடர்பில் ஆசிரியையால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காரைநகரிலுள்ள இந்த பாடசாலையின் அதிபர் அண்மையில் ஓய்வுபெற்று சென்றுவிட்டார். மூப்பின் அடிப்படையில் அங்குள்ள ஆசிரியர் ஒருவரே பதில் அதிபராக கடமையாற்றி வருகிறார்.

பதில் அதிபருக்கும், அங்கு பணியாற்றும் ஆசிரியையொருவருக்குமிடையில் நேற்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், பதில் அதிபர், அந்த பெண் ஆசிரியரின் கையை பிடித்து இழுத்து பாடசாலை வளாகத்திற்கு வெளியில் கொண்டு செல்ல முயன்றார். எனினும், ஆசிரியர் பிடியை விடுவித்து, வகுப்பறையை நோக்கி ஓடிச்செல்ல, அவரை விரட்டிச்சென்று பிடித்து, மீண்டும் கையை பிடித்து இழுத்து வந்து பாடசாலை வாசல் கதவின் வெளியே விட்டுள்ளார்.

ஒருமையிலும் பெண் ஆசிரியையை திட்டியுள்ளார்.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here