மூன்று பிள்ளைகளிற்கும் நஞ்சைக்கொடுத்து, தானும் அருந்திய தாய்!

தனது பிள்ளைகள் மூவருக்கும் குளிர்பானத்தில் நஞ்சை கலந்து கொடுத்ததுடன், தானும் அருந்தி தற்கொலைக்கு முயன்ற தாயும், பிள்ளைகளும் ஆபத்தான கட்டத்தில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் பகுதியில் நேற்று இந்த சம்பவம் நடந்தது.

34 வயது மதிக்கத்தக்க தாய், தனது பிள்ளைகளான ஒன்றரை வயது, ஆறு வயது, பன்னிரண்டு வயதுடையவர்களிற்கே நஞ்சை கொடுத்துள்ளார். குளிர்பானத்தில் நஞ்சைக்கலந்து கொடுத்து, தானும் அருந்தி குடும்பமாக தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

ஆறு வயது சிறுவன் தனது அம்மம்மாவிற்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தி நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். அம்மம்மா அயலவர்களிற்கு அறிவித்ததையடுத்து, அயலவர்களால் நால்வரும் செட்டிக்குளம் பிரதேசவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளிக்காக தாயார் திருகோணமலைக்கும், 12 வயது பிள்ளை யாழ்ப்பாண வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். தாய் மற்றும் இரு குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஒன்றரை வயது குழந்தை மேலதிக சிகிச்சைகளிற்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த தற்கொலை முயற்சிக்கான காரணம் தெரியவரவில்லை.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here