காணாமல் போனோர் பட்டியல் வெளியானது: தளபதிகள் தினேஸ் மாஸ்டர், ரமேஸ், வேலவனும் உள்ளடக்கம்!

யுத்தத்தின் இறுதியில் காணாமல் போன விடுதலைப்புலிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்திற்கமைவாக இந்த விரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

யுத்தத்தின் இறுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட 351 பேரின் பெயர் விபரங்களே இந்த பட்டியலில் உள்ளதாக அவதானிகளால் குறிப்பிடப்பட்டுள்ளது.

யோகி, இராணுவப்பேச்சாளர் இளந்திரையன், கல்விக்கழக பொறுப்பாளர் பேபி சுப்ரமணியம், எழிலன், இளம்பரிதி மற்றும் இராணுவத்துறையை சேர்ந்த ரமேஸ், வீமன், கீர்த்தி, நாகேஷ், தினேஸ் மாஸ்டர், இம்ரான் பாண்டியன் படையணி தளபதிகள் வேலவன், ஆராவமுதன், வீமன், லோரன்ஸ், மஜீத், கொலம்பஸ், நிதித்துறையை சேர்ந்த மனோஜ், குட்டி, கோள்சர் பாபு உள்ளிட்டவர்களின் பெயர் விபரங்களே வெளியிடப்பட்டுள்ளன.

இவற்றில் பலர் குடும்பமாக சரணடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. பேபி சுப்ரமணியத்தின் மனைவி, மகள், விளையாட்டுத்துறை பொறுப்பாளர் ராஜாவின் மனைவி சிறு பிள்ளைகள் உள்ளிட்ட பலரது குடும்பங்களும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளன.

இந்த பட்டியலை பார்வையிட விரும்புபவர்கள் கீழுள்ள இணைப்பிற்கு சென்று பார்வையிடலாம்.  http://www.disappearance.itjpsl.com/#lang=english

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here