மாணவிகளை இரும்பு கம்பியால் தாக்கிய அதிபர்: யாழில் அதிர்ச்சி சம்பவம்!

பெற்றோர்கள் கூட்டத்திற்கு வராததால் மாணவிகளை மைதானத்தில் வைத்து அன்ரெனா கம்பியினால் தாக்கியதால் மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் கொடிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட கச்சாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.

தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது நேற்று மயங்கி வீழந்த நிலையில் யாழ்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பரிசோதனைகளை மேற்கொண்டபோது கை மற்றும் தாடை எலும்புகளில் வெடிப்பு மற்றும் கண்டல் காயம் இருந்துள்ளது. அதுகுறித்து மாணவி விளக்கமளித்தபோது, பாடசாலை அதிபரால் தாக்கப்பட்ட விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெற்றோரின் கூட்டத்திற்கு வராத மாணவிகளை மைதானத்திற்கு அழைத்து, முச்சக்கர வண்டியில் அன்ரனாவினால் அதிபர் தாக்கியுள்ளார்.

இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததும், ஆத்திரமடைந்த பெற்றோர் பாடசாலையின் அதிபர் மற்றும் வலய கல்வி அலுவலருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர்.

மாணவர்கள் தவறு செய்தால் கண்டிக்கும் அதிகாரம் அதிபருக்கு உண்டு என பாடசாலை அதிபரும் கல்வி அதிகாரியும் தெரிவித்துள்ளனர்.

மாணவர் தவறு செய்தால் தண்டிக்கும் உரிமை அதிபருக்கு உண்டு என்பதை ஏற்றுக் கொள்வதாகவும் பெற்றோர் கூட்டத்திற்கு வருகை தராததால் மாணவர்களைக் கண்டிப்பது எந்த விதத்தில் நியாயமானது என பெற்றோர் கேள்வி எழுப்பினர்.

சம்பவம் தொடர்பில் பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது

 

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here