கிணற்றுக்குள் சடலமாக மிதந்த இளைஞன்!

0

கிணற்றில் இருந்து இளைஞனின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா வேப்பங்குளம் 6 ஆம் ஒழுங்கையில் உள்ள மைதானத்தில் உள்ள கிணற்றில் இருந்து சடலம் மீட்கப்பட்டது.

மகாறம்பைகுளம் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய அனோஜன் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மகாறம்பைகுளத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்த இளைஞன், இன்று காலை வேப்பங்குளம் பகுதியில் உள்ள காணி ஒன்றை பார்வையிட்டு வருவதாக வீட்டிலில் கூறிச் சென்றுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சடலத்தை கிணற்றிலிருந்து வெளியில் எடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here