தென்கிழக்கு பல்கலையின் துணைவேந்தர் பதவியிழப்பு: பேராசிரியர் உமா குமாரசாமி பதில் கடமைக்கு நியமனம்!

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரின் கடமைகளை நிறைவேற்றுகின்ற நிறைவேற்று அதிகாரியாக பேராசிரியர் உமா குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் ஜூன் 18ஆம் திகதியான நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வர்த்தமானி அறிவிப்பை உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச விடுத்துள்ளார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு மூன்று நாள்கள் முன்னதாகவே, அவரின் சேவை முடிவுறுத்தப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவிப்பில் விதந்துரைக்கப்பட்டுள்ளதாவது: “1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20 (04)(ஆ) பிரிவால் எனக்கு வழங்கப்பட்ட தத்துவங்களின் அடிப்படையில், இந்த நியமனத்தை, நான் மேற்கொள்கின்றேன்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிருவாகம் பாரதூரமான வகையில் ஒழுங்கு குலைந்துள்ளது என்றும், இந்தப் பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கு தவறியுள்ளனர் என்றும் கூறப்படுவதில் திருப்திப்படுவதன் மீது,
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு சொல்லப்பட்ட சட்டத்தின் கீழ், அல்லது அதன்கீழ் ஆக்கப்பட்ட ஏதேனும் கட்டளை, கட்டளைச் சட்டம், நியதிச் சட்டம், துணை விதி, ஒழுங்கு விதி, அல்லது விதியின் கீழ் அளிக்கப்பட்டுள்ள, அல்லது அவர் மீது சுமத்தப்பட்டுள்ள, அல்லது அவருக்குக் குறித்தளிக்கப்பட்டுள்ள ஏதேனும் தத்துவத்தை, கடமையை அல்லது பணியை – சொல்லப்பட்டுள்ள துணைவேந்தருக்குப் பதிலாக பிரயோகிக்கின்ற, புரிகின்ற மற்றும் நிறைவேற்றுகின்ற நோக்கத்துக்காக 18 ஜுன் 2018ஆம் திகதியிலிருந்து தகுதி வாய்ந்த அதிகாரியாக இருப்பதற்கு பேராசிரியர் உமா குமாரசாமியை இக் கட்டளை மூலம் நியமிக்கிறேன்“ என்றுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here