விமானத்திற்குள் பிச்சையெடுத்த நபர்: வீடியோ!

விமானத்தில் ஒருவர் பிச்சை கேட்கும் வீடியோ ஒன்று பயணி ஒருவரால் வீடியோ செய்யப்பட்டு வெளியிடபப்ட்டு வைரலாகி உள்ளது.

முதிய தோற்றமுடைய நபர் ஒருவர் பிளாஸ்டிக் பை ஒன்றை கையில் வைத்தபடி பயணிகளிடம் பிச்சை கேட்ட இச்சம்பவம் டோஹா – ஷிராஸ் செல்லும் கட்டார் ஏர்வேசில் இடம்பெற்றுள்ளது.

பிச்சை கேட்காமல் சீட்டில் அமருமாறு பலமுறை பயணிகள் கோரியும் அதனை அவர் சட்டை செய்யவில்லை எனவும், சிலர் அவருக்கு பணம் கொடுத்ததாகவும், இதனால் விமானம் ஏற பிந்தியதாகவும் தெரிவிக்கபடுகிறது.

பின்னர் விமான பணியாளர்கள் அவரை கொண்டுபோய் அமர வைத்ததாகவும், அவரின் நிலையை பார்த்த மேலும் சில பயணிகளும் பணம் கொடுத்ததாகவும் தெரிவிக்கபடுகிறது.

குறிப்பிட்ட நபர் ஈரான் நாட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here