‘பிக் பாஸ்’ வீட்டுக்குள்ளும் மனைவியுடன் சண்டை போடும் பாலாஜி

“பிக் பாஸ்“ வீட்டுக்குள் சென்ற பிறகும், மனைவியுடன் சண்டை போடுகிறார் பாலாஜி.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ் 2’. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், 16 பேர் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டுள்ளனர். அதில், காமெடி நடிகர் பாலாஜி மற்றும் அவருடைய மனைவி நித்யாவும் அடங்குவர்.

‘தாடி பாலாஜி’ என்று செல்லமாக அழைக்கப்படும் பாலாஜிக்கும், அவருடைய மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். பாலாஜி தன்னைக் கொடுமைப்படுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் நித்யா. இத்தனைக்கும் இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள்.

இந்நிலையில், தன் மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற காரணத்துக்காகவே ‘பிக் பாஸ் 2’வில் கலந்து கொள்வதாக கமல்ஹாசனிடம் தெரிவித்தார் பாலாஜி. வீட்டுக்குள் நித்யா நுழைந்தபோது இருவரும் கைகொடுத்துக் கொண்டனர். அதைப் பார்க்கும்போது, விரைவில் இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்றே தோன்றியது.

ஆனால், ஓரிரு நாட்களிலேயே மனைவியுடன் சண்டையைத் தொடங்கிவிட்டார் பாலாஜி. இன்று வெளியாகியுள்ள புரமோஷன் வீடியோவில், “பொரியல்ல ஒரு வெங்காயம் போடணும்ல?” என்று நித்யாவிடம் கேட்கிறார் பாலாஜி. அதற்கு நித்யா ஏதோ பதில் சொல்கிறார். “வெங்காயம் போடணுமா? இல்லையா? அதுதான் ஒரே பதில்” என்று கோபத்துடன் கேட்கிறார் பாலாஜி.

உடனே, “வெங்காயம் சேர்த்துக்கோங்க” என்கிறார் மும்தாஜ். “இல்ல… பரவாயில்ல, வேண்டாம்” என்கிறார் நித்யா. “நீங்க பிடிவாதம் பண்ணா, மத்த எல்லோரும் பாதிக்கப்படுவாங்க. உங்க சொந்தக் காரணத்துக்காக நாங்க பாதிக்கப்பட தயாராக இல்லை” என்று கோபத்துடன் சொல்கிறார் மும்தாஜ்.

இந்தப் பிரச்சினை என்ன ஆனது என்று இன்று இரவு ஒளிபரப்பாக இருக்கும் ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் தெரியவரும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here