‘நாடாளுமன்ற தேர்தலில் புதுமுகங்களிற்கு வாய்ப்பளியுங்கள்’: தமிழ் அரசு கட்சி இளைஞரணி தீர்மானம்!


அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் இளையவர்கள்- புதுமுகங்களிற்கு வாய்ப்பளியுங்கள் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் வாலிபர், மகளிர் அணி செயற்குழுக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

வாலிபர் முன்னணி, மகளிர் அணிகளின் செயற்குழு கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடந்தது. இதன்போதே, மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ் அரசு கட்சியின் பல எம்.பிக்கள் வயதானவர்கள், அவர்கள் மீது மக்களின் அதிருப்தி உள்ளது, அதனால் இளைஞர்கள்- புதியவர்களிற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள், பெண்களிற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கட்சி தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அத்துடன், கட்சி பிரமுகர்கள் வேட்பாளர் தெரிவின்போது மண்குதிரைகளை தெரிவு செய்வதையும் சுட்டிக்காட்டினர். தம்முடன் போட்டியிட்டி வெற்றியடைய முடியாதவர்களையே சக வேட்பாளர்களாக பிரமுகர்கள் தெரிவு செய்கிறார்கள், இப்படி மண் குதிரைகளை தெரிவு செய்யாமல், வெற்றியடையக் கூடிய- ஓடக்கூடிய குதிரைகளை தெரிவு செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது.

அத்துடன், கட்சி மற்றும் கூட்டமைப்பை பகிரங்கமாக விமர்சிக்க கூடாது, அணிகளை உருவாக்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here