தண்ணீரை சுத்தமாக்க முருங்கை மரம் உதவும்: அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு

தண்ணீரைத் தூய்மைப்படுத்த முருங்கை மரம் உதவும் என்று அமெரிக்க பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவில் கார்னேஜி மெல்லோன் பலைக்கழகம் உள்ளது. இங்குள்ள ஆராய்ச்சியாளர்கள் சிலர் தண்ணீரைத் தூய்மைப்படுத்த உதவும் மரம், செடி, கொடிகள் குறித்து ஆராய்ச்சி நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் தண்ணீரைத் தூய்மைப்படுத்த முருங்கை மரம் உதவும் என்பதை கண்டறிந்துள்ளனர். மேலும் குறைந்த செலவில் நீரைத் தூய்மைப்படுத்த முருங்கை மரம் உதவுகிறது என்பதையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உணவுக்காக வளர்க்கப்படும் முருங்கை மரத்திலிருந்து கீரை, முருங்கைக்காய், முருங்கைப் பூ போன்றவற்றை இலங்கை, இந்திய மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதன் தாவரவியல் பெயர் மோரிங்கா ஓலைபெரா ஆகும். இந்த நிலையில் கார்னேஜி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், முருங்கை மரத்தை தண்ணீரைத் தூய்மையாக்க பயன்படுத்த முடிவு செய்தனர். அதன்படி எப்-சான்ட் என்ற பொருளை உருவாக்கியுள்ளனர். ஒரு தொட்டியில் மணலைப் பரப்பி அதன் மேல் சிலிக்கன் துகள்களைக் கொட்டி பின்னர் முருங்கை கீரை, விதையிலிருந்து எடுக்கப்பட்ட புரதச் சத்துகளை பரவலாக வைப்பதே எப்-சான்ட் என்பதாகும். இந்த எப் சான்ட் என்பது மிகவும் குறைந்த செலவில் நீரைத் தூய்மைக்க உதவுகிறது. நீர் சுத்திகரிப்பானாக முருங்கை பயன்படுத்தப்படுகிறது.

மேலும் எப்-சான்ட் மூலம் தண்ணீரைச் செலுத்தும்போது அதிலிருக்கும் நுண்ணுயிரிகள் கொல்லப்படுகின்றன. மேலும் தேவையில்லாத பொருட்கள் வடிகட்டப்படுகின்றன. நீரிலிருந்து அசுத்தங்கள் நீக்கப்படுகின்றன. இதன்மூலம் தண்ணீர் நீண்ட நாட்களுக்கு சுத்தமாக இருக்கும். ஐ. நா. சபை கணக்கீட்டின்பது உலகில் 210 கோடி மக்கள் பாதுகாப்பான குடிநீர் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், வளர்ந்த நாடுகளில் வசிப்பவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த வகை தாவரங்கள் வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டல நாடுகளில் வளரக்கூடியவை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here