இரணைமடுவில் 4,000 இராணுவ குடும்பங்களை குடியமர்த்தும் இரகசிய திட்டம்!

கிளிநொச்சி இரைணைமடு குளத்தின் தெற்கு பக்கமாக சுமார் 4,000 இராணுவ குடும்பங்களை குடியமர்த்துவதற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் காலத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த நடவடிக்கை, ஆட்சி மாற்றத்தின் பின் கிடப்பில் போடப்பட்டிருந்தது. அந்த திட்டம் மீளவும் இப்பொழுது தூசி தட்டி எடுக்கப்படுகிறது. இது மிக ஆபத்தானது என எச்சரித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி, சிறிதரன்.

வடமாகாணத்தில் உள்ள காணி பிரச்சனைகள், சிங்கள குடியேற்றங்கள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட குழு நேற்று செவ்வாய்கிழமை கொழும்பில் கூடியது. இந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவித்தபோது, சி.சிறிதரன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இரணைமடு குளத்திற்கு தெற்கு பக்கமாக சீன அரசாங்கத்தால் இராணுவத்திற்கு வழங்கப்பட்ட பொருத்து வீடுகள் பெருமளவில் அமைக்கப்பட்டு அப்பகுதியில் சுமார் 4,000 இராணுவ குடும்பங்களை குடியமர்த்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச முயற்சித்திருந்தார்.

எனினும், ஆட்சி மாற்றத்தினால் இந்த நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டிருந்தது.

எனினும், இந்த முயற்சி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பின் நேற்றைய, காணி விவகாரங்கள் மற்றும் சிங்கள குடியேற்றம் தொடர்பான கூட்டத்தில் ஆராயப்பட்டது. இந்த குடியேற்ற திட்டம் தொடர்பான வரைபடங்கள், ஆதாரங்களுடன் ஆவணம் ஒன்றை தயாரிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

Loading...

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here