சிறிதுகாலம் கோட்டாவை அவதானிக்க தமிழ் அரசுக்கட்சி தீர்மானம்!

இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் அரசியல் செயற்குழுவின் கூட்டம் இன்று திருகோணமலையில் இடம்பெற்றது.

இதன்போது, ஜனாதிபதி தேர்தல் மற்றும் கட்சியின் அண்மைய செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வு இடம்பெற்றது. இதில் முக்கியமான தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை.

கோட்டாபய தற்போது ஜனாதிபதியாகியுள்ளதால், அவருக்கு அவகாசம் வழங்கவும், அவரது நடவடிக்கைகளை அவதானிக்கவும், குறிப்பிட்ட காலத்திற்கு அவதானித்துக் கொண்டிருப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கட்சியின் 70வது ஆண்டு நிறைவு விரைவில் வரவுள்ளமையை முன்னிட்டு, மாவட்ட ரீதியாக கட்சியின் வரலாற்றை தெளிவுபடுத்தும் திட்டம் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here