மனைவியின் ஒத்துழையாமைக்கு வேறு காரணமும் உள்ளது: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 19


மனோஜ் ராம் (34)
அட்டன்

எமக்கு திருமணமாகி 2 வருமாகிறது. ஒரு குழந்தையுண்டு. ஆனால் இப்பொழுது எமக்குள் ஒரு பிரச்சனையுண்டு. நான் விரும்பும் நேரத்தில் மனைவி சம்மதிப்பதில்லை. அதற்காக நான் நிறைய விட்டுக் கொடுப்புடன் நடந்து, அவருக்கு பொருத்தமான சமயமென கருதிய நேரங்களில் உடலுறவிற்கு விரும்பினாலும், அவர் சம்மதிப்பதில்லை. இருவருக்கும் உடல்ரீதியான எந்த பிரச்சனையுமில்லை. ஆனால், ஏன் இப்படி நடக்கிறது?

டாக்டர் ஞானப்பழம்: உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அவர் உங்களை தண்டிக்கிறார். அவர் ஏன் உங்களை தண்டிக்கிறார் என்பதை கண்டுபிடிப்பதே, பிரச்சனையை தீர்க்க ஒரே வழி.

கணவன் மனைவிக்கோ, மனைவி கணவனுக்கோ தாம்பத்ய இன்பத்தைக் கொடுக்க மறுத்தால், அதை ‘செக்ஸ் டினையல்’ (Sex Denial) என்போம். இருவருக்குமிடையில், ‘யார் பெரியவர்’ என்ற போட்டி ஏற்படுவதே இந்த நிலைக்குக் காரணம். கணவன் மனைவிக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட முக்கியக் காரணமாக இருப்பது கோபம். கணவன் மீது மனைவியோ, மனைவி மீது கணவனோ கோபம் கொண்டு தாம்பத்யத்தைத் தவிர்ப்பது பொதுவானது. ஆனால், ஒருவர் மீது கோபம் இருப்பதை அறியாமல் தவிர்ப்பதுதான் மிகவும் ஆபத்தானது, அதைக் கையாள்வதும் கடினம்.

தாம்பத்யத்தில் ஆர்வம் வரும்போது, இணை அதை ஏற்றுக்கொண்டு கோபத்தை மறந்து, ஈடுபட்டால்தான் தாம்பத்யம் தேனாக இனிக்கும். தாம்பத்யம் வைத்துக்கொள்ள மறுப்பது, இணைக்குத் தரும் தண்டனை. கணவன் மீது கோபமாக இருக்கும் பெண், ஆர்வத்துடன் தன்னை நெருங்கும் கணவனைத் தடுப்பாள்; அவனது குறைகளைச் சொல்லிக் காயப்படுத்துவாள். இதேபோலதான் ஆணும் மனைவியிடம் நடந்துகொள்வான். கோபத்தில், இணையின் அழகு குறித்துச் சிலர் மோசமாக விமர்சனம் செய்வார்கள்; மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசி அவமானப்படுத்துவார்கள்.

சில நேரங்களில், தாம்பத்யம் வேண்டாமென்று நேரடியாக மறுக்க மாட்டார்கள். ‘சீக்கிரமாக முடித்துக்கொள்’ என்று அவசரப்படுத்துவார்கள். ‘ஏன் அடிக்கடி தொந்தரவு செய்கிறாய்?’ என்று கோபப்படுவார்கள். சிலர், கணவன் நெருங்கும்போது, ‘குழந்தைகள் தூங்கவில்லை’, ‘பிள்ளைகள் வந்துவிடுவார்கள்’ என்று ஏதேதோ காரணம் சொல்லி மறுப்புத் தெரிவிப்பார்கள். நேரடியாகச் சொல்லாமல், வேறு காரணம் சொல்லி மறுப்பார்கள். சிலர், எப்படி தாம்பத்யம் வைத்துக்கொண்டால் தனக்கு சந்தோஷம் கிடைக்கும் என்பதைச் சொல்லாமல், ‘உனக்கு ஒன்றும் தெரியவில்லை, எதற்கும் லாயக்கில்லை’ என்று இணையைப் புண்படுத்துவார்கள்.

‘ஆர்வத்தோடு வரும்போது, ‘இப்போது வேண்டாம்… பிறகு வைத்துக்கொள்ளலாம்’ என்று சொல்வார்கள். ஆர்வம் குறைந்த நேரத்தில் உறவு வைத்துக்கொள்ள வற்புறுத்துவார்கள். மனைவி அழைக்கும்போது கணவனோ, கணவன் அழைக்கும்போது மனைவியோ வெவ்வேறு காரணங்களைச் சொல்லி மறுப்பார்கள். தன் இணையின் தேவை என்ன என்பது தெரிந்தும் அவர்களுக்குத் தண்டனை கொடுக்கும்விதமாக நடந்துகொள்வார்கள். இவையனைத்தும் இருவரிடமும் மனப்பக்குவம் இல்லாததால் ஏற்படும் பிரச்னைகளே.

கணவன்-மனைவியிடையே பிரச்னைகள் வருவது இயல்பு. அதை முறையாகக் கையாண்டு, விட்டுக்கொடுத்துப் போவதன் மூலம் சரிசெய்ய வேண்டுமே தவிர, தண்டனை கொடுக்கக் கூடாது. இதுபோன்ற பிரச்னை இருப்பவர்கள், மனநல மருத்துவரைச் சந்தித்துச் சரிசெய்துகொள்வது நல்லது. பிரச்சனை பெரிதாகாமல் தவிர்க்கலாம். கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவதன் மூலம் தாம்பத்ய வாழ்க்கையை மேலும் இனிதாக்கிக்கொள்ளலாம்!

எம்.பிரசன்னா (27)
வவுனியா

நான் வங்கியில் பணிபுரிகிறேன். விடுதியில் தங்கியிருக்கிறேன். எனது ஆணுறுப்பு சிறியது. எப்படியோ அது நண்பர்களிற்கு தெரிந்து, என்னை கேலி செய்வார்கள். இப்பொழுது எனக்கு திருமண ஏற்பாடு வீட்டில் நடக்கிறது. எனக்கு பயமாக இருக்கிறது. மனைவி கேலி செய்வாரோ என்பதை விட, திருப்தியான உடலுறவிற்கு போதுமான நீளமுடையதா என்ற கேள்வியும் உள்ளது. நண்பர் ஒருவரின் மூலம், ஆயுர்வேத மருந்தும் பாவித்தேன். சரியாகவில்லை. நான் என்ன செய்யலாம்?

டாக்டர் ஞானப்பழம்: தம்பி… நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது, “‘‘இந்திரியம் ஒழுகுகிறதா? வெட்டைச் சூடா, வெள்ளையா? இளம் வயதில் அறியாமல் செய்த தவறா? இல்லற வாழ்க்கையில் பயமா? உறுப்பு சிறுத்து இருக்கிறதா? வருந்த வேண்டாம்’’ என வெளியாகும் விளம்பரங்களை பார்த்து ஏமாந்து போவதை நிறுத்துவது. அடுத்தது, இதை ஒரு பிரச்சனையாக நினைப்பது. இந்த இரண்டையும் நிறுத்தினாலே உங்கள் பிரச்சனை தீர்ந்து விடும்.

ஆண்களுக்கான இனப் பெருக்க உறுப்பு, சிறுநீர் கழிக்கும் உறுப்பாகவும் இருக்கிறது. நிறைய ஆண்களுக்குத் தங்கள் உறுப்பு பற்றிய தாழ்வு மனப்பான்மை உண்டு. அதனால்தான் மற்றவர்களின் உறுப்புடன் அதை ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். எல்லோருடைய உறுப்பும் அவரவர் உடல்வாகுக்கு ஏற்பத் தடிமனிலும் நீளத்திலும் வித்தியாசமானது. அதற்கும் உடல் இன்பத்துக்கும் சம்பந்தம் இல்லை. தடிமனும் நீளமும் குறைவாக உள்ளவர்கள் இன்பம் வழங்குவதில் குறைந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

இந்த உறுப்பு பெண்ணின் உறுப்பினுள் நுழைந்து இயங்கும் போதுதான் ஆணும் பெண்ணும் இன்பம் அடைகிறார்கள். அதைப் பற்றி விரிவாகப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக சொல்கிறேன். மனம், செக்ஸ் கிளர்ச்சி அடையும்போது, ஆணின் உறுப்பினுள் இரத்தம் நிரம்புகிறது. அதனால்தான் விரைப்புத்தன்மை ஏற்படுகிறது.

உறுப்பு எல்லா நேரங்களிலும் விரைப்புடன் இருப்பது இல்லை. பெரும்பாலும் சாதாரண இரப்பர் குழாய்போலத்தான் இருக்கும். விரைப்புத்தன்மை அற்ற உறுப்பின் நிலையை ஃப்ளாஸிட் (Flaccid) என்று அழைக்கிறோம். சுருங்கிய நிலையில் சிறியதாக இருக்கும் உறுப்பு, விரைப்பு நிலையில் 3 முதல் 5 அங்குலம் வரை நீளும். உடம்பின் இரத்த ஓட்டத்தில் ஒரு பகுதி, ஆண் உறுப்புக்குச் சில நிமிடங்களுக்கு அனுப்பப்படுகிறது. அப்போது உறுப்பு மேல் நோக்கி உயர்ந்து நிற்கும்.

பொதுவாக ஆண்குறி எவ்வளவு நீளம் இருக்க வேண்டும் என பலர் கேட்பார்கள். உண்மையில் அப்படியொரு உடல் விதி கிடையாது.

நீளமும் தடிமனும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். இரண்டு இன்ச் நீளம் இருந்தால் போதும் அது தன் கடமையை நிறைவேற்றக் கூடியதாக இருக்கும். விரைப்புக்கு முன், என்ன அளவில் இருந்தாலும், விரைப்புக்குப் பின், சராசரியாக நாலரை அங்குலத்தில் இருந்து, ஐந்தரை அங்குல அளவுக்கு நீள்கிறது என்பதுதான் மருத்துவ உண்மை.

நிஜமாகவே இரண்டு அங்குல அளவு நீளம் இருந்தால் போதுமென சொன்னாலும் பலர் நம்புவதில்லை. அவர்களை சமரசப்படுத்த நாம் அப்படி சொல்வதாக நினைப்பார்கள்.

பெண்குறியின் ஆழம், சராசரியாக ஆறு அங்குல அளவு இருக்கும். ஆனால், பெண் உறுப்பின் முதல் இரண்டு அங்குல ஆழத்தில்தான், உணர்வுகளைத் தூண்டும் நரம்புகள் முடிகின்றன. அதற்கு அடுத்த நான்கு அங்குலத்தில் உணர்வுகளைத் தூண்டும் பகுதி இல்லை. ஆக, ஆண்குறி இரண்டு அங்குலம் இருந்தாலே பெண்களுக்குத் திருப்தி தருவதற்குப் போதுமானது.

ஆண்குறியின் தடிமனும் முக்கியமானது இல்லை. பெண்குறி சுருங்கவும் விரியவும் கூடியது. ஒரு விரல் நுழையும் அளவில் இருந்து குழந்தையின் தலை வெளியே வரும் அளவுக்கு, அது சுருங்கவும் விரிவடையவும் செய்யும். ஆகவே, எந்த அளவு தடிமன் இருந்தாலும் பிரச்சனை இல்லை.

கடந்த பாகத்தை படிக்க: மார்பகங்களின் அளவு வித்தியாசப்படுகிறதா?… கவலை வேண்டாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here