நூற்றுக்கணக்கானோரின் கண்ணீர், கதறலுக்கிடையில் மல்லாகம் இளைஞனின் இறுதிக்கிரியை!

மல்லாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞரின் இறுதிச் சடங்கு நேற்று மாலை நடைபெற்றது. பல நூற்றுக் கணக்கானோரின் கண்ணீரிடன் இளைஞனின் பூதவடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மல்லாகம் சகாய மாதா தேவாலயத்திற்கு முன்பாக கடந்த ஞாயிற்றுகிழமை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் குளமங்கால் பகுதியை சேர்ந்த ஜோர்ஜ் பாக்கியராஜா சுதர்சன் (வயது 32) எனும் இளைஞர் உயிரிழந்தார்.

உயிரிழந்த இளைஞனின் நல்லடக்க ஆராதனை குளமங்கால் புனித சவேரியார் ஆலயத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை 3மணியளவில் நடைபெற்று திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு குளமங்கால் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்ப்பட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here