குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி தரும் பலன்கள்.. ஒரு தன்னிலை ஆய்வுக்கு!


சாதாரண – பாமர, ஜோதிட அறிவு சிறிது உள்ளவர்கள் கூட அறியும் பொருட்டு இந்த கட்டுரை வெளியிடப்படுகிறது. குரு பெயர்ச்சியும், சனி பெயர்ச்சியும் இவை இரண்டுமே வருட பலனை சீர்தூக்குபவைகளாகும். வருட கிரகங்கள், வருட பலனை நிர்ணயிப்பவர்கள் என்றால் அது மிகை ஆகாது. வருட கிரகங்களான இவை குரு ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு ராசியாக கடந்து செல்பவர் என்றால், சனி ஒவ்வொரு ராசியில் 2-1/2 வருடம் அமர்ந்து செல்பவர். அதற்குள் குருவானவர் 2 ராசிகளை கடந்து விடுவார்.

சனி தொழில் காரக கிரகம் ஆகும். அதனால் சனியை வைத்து தொழிலைப் பற்றி கூறும் போது, சனி தொழிலைக்குறிக்கும். ராகு தொழிலுக்கு ஏற்படுத்தும் தடையை குறிக்கும், கேது தொழிலுக்கு ஏற்படும் நெருக்கடியைக் குறிக்கும். இதுபோல் ஒவ்வொன்றினையும் ஆராய்ந்தே ஒரு ஜாதகத்தின் பலனை சொல்லவேண்டும். அதுபோல் இங்கே அணைத்து கிரகங்களையும் தொழில் சார்ந்தே சிந்திக்க வேண்டும் மற்றும் பலன் கூற பயன்படுத்த வேண்டும். பொதுவாக ஒரு கிரகத்தின் காரகத்துவங்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது தான் ஒரு ஜோதிடரை சக்திமிக்கவராக, தெய்வக்ஞராக மாற்றும்.

தற்போது தான் குரு பெயர்ச்சி நடந்துள்ளது. அது 13.11.2020 வரை தனது சொந்த வீடான தனுசு ராசியில் தான் குரு இருப்பார். இந்த கால கட்டத்தில் ஏற்படும் திருமணங்களுக்கு குருவால் நன்மை அடைபவர்கள் யார் யார்? என்பதனை இந்த கட்டுரையில் காணலாம். இந்த இடத்தில் நாம் முக்கியமாக பார்க்க வேண்டியவை மற்றும் தீர்மானிக்கப் படவேண்டியவை என்னவென்று காண்போம்.

ஒரு கிரகம் கோள்சார ரீதியாக ஒரு ராசியைக் கடக்கும் போது காணவேண்டியவைகள்:-

ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில், ஒரு கிரகம் அதன் பகை கிரகத்துடன் சேர்ந்திருக்கும்போது, கோள்சார ரீதியாக இன்னொரு பகை கிரகம் வந்து சேரும் போது பாதிப்பை அதிகமாக வெளிப்படுத்தும் என்பதனை அறியவேண்டும். ஜோதிடம் சரியாக அறியாதவர்கள், ஒரு ஜோதிடரைப் பார்த்ததுமே, நான் இந்த ராசி இப்போ நடந்த குரு பெயர்ச்சி எனக்கு எப்படி இருக்கும் அடுத்து வரும் சனி பெயர்ச்சி எனக்கு எப்படியெல்லாம் இருக்கும் என பொத்தாம் பொதுவாக கேட்கிறார்கள். பாவம் அவர்களுக்கு என்ன தெரியும் இப்படி பொதுவாக கூறும் பலன்கள் அனைவருக்கும் அப்படியே சரியாக வராது என்பது. ஏன்னெனில் இங்கு சிறிய விளக்கம் கூற கடமைப்பட்டுள்ளேன்.

அதாவது, ஒவ்வொரு ராசியும் ஒரு கிரஹத்தின் ஆட்சி, உச்ச, நீச்ச மற்றும் ஆண் / பெண் ராசி, மேலும் பஞ்சபூத தத்துவங்களை அடக்கிய நிலம், நீர், தீ, காற்று ராசிகளாகவும், மேலும் ஒவ்வொரு ராசியும் 3 கிரஹங்களினுடைய நட்சத்திரங்களை அடக்கி, 9 பாதங்கள் ஒரு ராசிக்குள் இருந்து, அவற்றின் பார்வை, சேர்க்கை, அட்டமாதி, பாதகாதிபதி விரையாதிபதி எனும் அத்தனையும் உண்டு. இன்னும் நிறைய விஷயங்களை கண்டு தான் ஒருவரின் பலனை நிர்ணயம் செய்யமுடியும்.

ஒருவருக்கு தற்போது அவரின் ஜனன கால ஜாதகத்தில், ஒரு ராசியில் ஒரு கிரகம் கோச்சாரத்தில் பிரவேசிக்கிறது என்றால், அந்த ராசியில் ஏற்கெனவே ஒரு பகை கிரகத்துடன் அங்குஇருந்து இப்போதும் கோச்சாரத்தில் சென்று அமரும்போது அந்த கிரகம் கோச்சார கிரகத்துக்கும் பகை ஆனால், அதனால் விளையும் பாதிப்பு சற்றே கூடலாம். அதுவே கோச்சாரத்தில் சென்று அமரும் கிரகம் நட்பு கிரகம் ஆக இருப்பின் கோச்சாரகிரகத்தின் பாதிப்பு அளவாகவே இருக்கும்.

சரி, கோச்சார கிரகத்தால், பாதிப்பே இருந்தாலும் ஒருவரின் தசா புத்தி அந்தரம் சாதகமாக இருப்பின் அந்த கெட்ட பலனை ஜாதகர் தாங்கிக்கொள்வார். அதுவே ஜாதகருக்கு சாதகம் இல்லை எனில், ஜாதகரின் பாதிப்பு தாங்க முடியாமல் போக வேண்டிவரும். ஒருவேளை கோச்சார கிரகம் சென்று அமரும் ராசியில் ஒரு ஜாதகருக்கு ஜனன காலத்தில் ஒரு கிரகமும் இல்லை என்றால் கோச்சார கிரகம் பெரிய அளவில் ஒன்றும் மாற்றம் நிகழ்ந்து விட வாய்ப்பில்லை. அதுவே கோச்சார கிரகம் சென்று அமரும் இடத்தில் ஒன்றுக்கு மேற்பட்டு இருக்கும் போது ஒன்றுக்கு மேற்பட்ட பலனை தரவேண்டி வரும்.

இதனை உணர்ந்தே ஒரு ஜோதிடரின் பணி எவ்வளவு என்பதனை சுட்டிக்காட்டவே இத்துணை விவரமும் எடுத்துரைத்தேன். இப்போது கூறுங்கள் ஒருவரின் பொதுவான ராசி பலன் காண்பதால் சிறந்த பலனை அறியமுடியுமா அல்லது ஒரு ஜாதகரின் ஜனன கால ஜாதகத்தை வைத்து பலன் அறிவது சிறந்ததா, என வாசகர்களே தீர்மானியுங்கள். பொதுவான பலனில், ஓரளவு மட்டுமே பலன் ஒத்து போக வாய்ப்பு. சந்திரனுக்கு 5ல், 7ல் மற்றும் 9இல் குரு இருந்தாலோ அல்லது குருவின் பார்வை பெற்றாலோ சுப காரியங்கள் நடக்கும் காலமாக அது இருக்கும்.

அதே போல் களத்திரகாரகராகிய செவ்வாய் ஜனன காலத்தில் இருக்கும் இடத்தின் மீது குரு பயணப்படுகிற போது திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு அது திருமண காலமாக அமையும். ஜனன கால சனியின் மீது, ஒரு ஜாதகருக்கு, குரு கோச்சார ரீதியாக பயணப்படுகிறபோது அவர் செய்யும் வேலையில் அதிக சம்பளத்தை தருவார் அல்லது பதவியுயர்வுடன் கூடிய அதிக சம்பளம் தரச்செய்வார். மேலேயும் சொல்வதானால் ஒரு சிலருக்கு, அதிக சம்பளம் பெறும் வேறு ஒரு நிறுவனத்தில் சேரும் வாய்ப்பும் கிடைக்கச் செய்வார். இது நிச்சயம் நடந்தே தீரும்.

இவ்வாறு குரு, சனி கோச்சார ரீதியாக ஒரு ராசியில் பயணிக்கிற போது, அந்த ராசியில் ஒருவரின் ஜனன காலத்தில் உள்ள ராசியில் உள்ள குரு, சனி தந்த பினாஷ்டக பரல்களையும் பார்த்தால் அவர்களின் நல்ல கெட்ட பலன்களின் அளவை கணக்கிடலாம். பொதுவாகவே குருவுக்கும், சனிக்கும் ஒரு நெருங்கிய ஒற்றுமை மற்றும் ஒருவித ஈர்ப்பு உண்டென்றே சொல்லமுடியும்.

ஏன்னெனில் நியாயம், நேர்மை தரும் குரு பயணிக்கும் காலத்தில் சனியும் சேர்ந்து பயணிக்கும் காலம் குறைவாக இருப்பினும் இருவரும் வேதகர், பாதகர் இல்லாத பட்சத்தில் நிச்சயம் நன்மைகளையே செய்வர். விகாரி வருடம் தை மாதம் 10-ஆம் தேதி, ஆங்கிலம் ஜனவரி 24ஆம் தேதி, 2020; சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சென்று 2 1/2 வருட காலம் பயணிக்க இருக்கிறார். இந்த பெயர்ச்சியால், தனுசு, மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு 7 1/2 சனியின் காலமாகும்.

விருச்சிக ராசிக்காரர்கள் முழுவதுமாக 7 1/2 சனியில் இருந்து விடுபடுகிறார்கள்.

சாயியைப் பணிவோம் நன்மைகள் அடைவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here