அவுஸ்திரேலியாவை நொறுக்கி 481 ஓட்டம் குவித்தது இங்கிலாந்து: உலகசாதனை!

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் அதிக ஓட்டங்களை குவித்த அணியென்ற பெருமையை இங்கிலாந்து பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது ஆட்டத்தில் இந்த சாதனையை புரிந்தது.

நொட்டிங்ஹாமில் நடக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில், முதலில் ஆடிய இங்கிலாந்து 6 விக்கெட்டுக்களை இழந்து 481 ஓட்டங்களை பெற்றது.

இங்கிலாந்து சார்பாக அலெக்ஸ் ஹேல்ஸ் 147 ஓட்டங்களையும், பரிட்ஸ்ஸோ 139 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஏற்கனவே ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த சாதனையும் இங்கிலாந்திடமே இருந்தது. 2016இல் இதே மைதானத்தில் பாகிஸ்தானிற்கு எதிராக 444/3 என சாதனை படைத்திருந்தனர். இரண்டு வருடங்களின் பின் இதே மைதானத்தில் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக இதே மைதானத்தில் 481 ஓட்டங்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

இதேவேளை ஒருநாள் போட்டி இன்னிங்ஸ் ஒன்றில் அதிக சிக்சர் அடித்த அணியென்ற சாதனையை மயிரிழையில் இன்றைய போட்டியில் இங்கிலாந்து தவறவிட்டுள்ளது. இன்று மொத்தமாக 21 சிக்சர்களை இங்கிலாந்து அடித்தது. ஒருநாள் போட்டியொன்றில் 22 சிக்சர்கள் அடித்த நியூசிலாந்து இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here