தொழில் வழிகாட்டலும் வேலை உலகிற்குள் பிரவேசமும்


தொழில் வழிகாட்டலும் வேலை உலகிற்குள் பிரவேசமும்
தொழில் வழிகாட்டல் என்பது தொழிலுக்கான வழிகாட்டலாகும். இதை அனைவரும் சரியான முறையில் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது தனிப்பட்ட ஒருவருடைய அறிவு(knowledge), தகவல்(Information), திறன்(skills) மற்றும் அனுபவங்களை (experience) இணங்கன்டு அதன் ஊடாக அவரது தொழில் துறைக்கு வழிகாட்டுவதாகும்.

இன்றைய உலகில் தொழில் வழிகாட்டலின் முக்கியத்துவம் மிகவும் பரவலாக பேசப்படுகின்ற ஒரு விடயமாக காணப்படுகின்றது. ஒரு பிள்ளை ஆரம்பத்தில் குழந்தையாக பிறக்கும் போது அவர்களுக்குரிய ஆரம்ப வழிகாட்டியாக பெற்றோர்கள் காணப்படுகின்றனர் இதனை பாடல்கள் மூலமும் தெளிவாகக் கூறியுள்ளனர். அதாவது “எந்த குழந்தையும் மண்ணில் பிறக்கையில் நல்ல குழந்தைகள் தான் அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்பினிலே” என அழகாக பாடியுள்ளனர். எனவே குழந்தைகளுக்குரிய ஆரம்ப வழிகாட்டியாக (Pre-Guidance) பெற்றோர்கள் கானப்படுகின்றனர்.

அதன் பிற்பாடு பிள்ளை கல்வி சமுகத்தினை அனுகிகின்றது. அதாவது ஆரம்பக் கல்வியில் காலடியெடுத்து வைக்கின்றது. அந்தவகையில் அப் பிள்ளைக்குரிய வழிகாட்டியாக பெற்றோர்களுடன் இணைந்து ஆசிரியர்கள் காணப்படுகின்றனர். இக் கால கட்டத்தில் பிள்ளை கல்வி வழிகாட்டலினூடாக (Education Guidance) அறிவுரீதியான பலவிடயங்களை கற்றுக்கொள்கின்றது. அத்தோடு கல்வியின் மூலம் பல படிகளை தாண்டிச் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தோடு முன்னோக்கி செல்கின்றது. இவ்வாறு பாடசாலை கல்வியை முடிவுற்றதும் பிள்ளை தொழிலுக்கு செல்வதற்காக தன்னை தயார்படுத்துகின்றது. இந்தவேளையில் தான் பிள்ளைக்குரிய வழிகாட்டலாக தொழில் வழிகாட்டல் (Guidance) மிகவும் பிரதான ஒன்றாக கானப்படுகின்றது.

ஆரம்ப வழிகாட்டல் →   கல்வி வழிகாட்டல்  →  தொழில் வழிகாட்டல்                         (Pre-Guidance)              ( Education Guidance)          (Career Guidance)

வேலை உலகிற்குள் பிரவேசம் என்பது தொழில் ஒன்றினை பெறுவதற்காக தன்னை தயார்படுத்தி தனது தேவைகளை பூர்த்தி செய்வதாகும். இன்றைய உலகம் தொழில் என்ற போர்வையினால் போர்த்தப்பட்டு பணம் என்ற தலையனையினை உள்ளே வைத்துக் காணப்படுகின்றது. அவ் பணம் என்ற தலையனையினை பெறவேண்டுமானால் தொழில் என்ற போர்வைக்குள் கண்டிப்பாக செல்லவேண்டும்.

வேலை உலகிற்குள் செல்ல வேண்டுமாயின் நம்மை முழுமையாக நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும் பொதுவாக மனிதர்களாகிய நாங்கள் எவ்வளவு படிப்புக்கள், பட்டப்படிப்புகள், மேற்படிப்புகள், ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புக்கள் என பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்றாலும் அவர்கள் இறுதியில் தொழில் என்ற போர்வைக்குள்ளே செல்கின்றனர். அவ் தொழில் என்ற போர்வைக்குள் சென்று பொருளாதாரத்தினை பெற்று நிம்மதியான சிறந்த வாழ்க்கையினை சந்தோசமாக ஓட்டிச் செல்கின்றனர்.

அவ்வாறாயின் நாமும், அதாவது இன்றைய நவீன உலகில் கால் பதித்துக் கொண்டிருக்கும் இளைஞர், யுவதிகள் இந்த வேலை உலகிக்குள் நிச்சயமாக செல்ல வேண்டும். அதிகரித்துவரும் நவினமயமாதல், பொருளாதார மாற்றம், பொருட்களின் விலையுயர்வு, அன்னிய செலவாணி மாற்றம், தனிநபர் வருமான மாற்றம் போன்ற பல செயற்பாடுகளுக்கு முகம் கொடுக்கவேண்டுமானால் அனைவரும் வேலை உலகிக்குள் (World of Work) செல்லவேண்டும்.

அவ்வாறாயின் எவ்வாறு வேலையுலகிக்குள் செல்லலாம்? அதற்கான கல்வி மற்றும் தொழில் தகைமைகளை எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்? எதிர் காலத்தில் தொழில் பரிமாற்றத்தினை எவ்வாறு மேற்கொள்ளவேண்டும்? போன்ற விடயங்களில் மிகவும் தெளிவாக இருக்கவேண்டும். அந்தவகையில் இலங்கை நாட்டைப் பொறுத்தவரையில் வேலையுலகிக்குள் செல்லவேண்டுமாயின் முக்கியமாக இரண்டு வழிகளில் செல்லலாம்

1. பாடசாலை மற்றும் பல்கலைகழக கல்வி ஊடாக
2. தொழில் கல்வி ஊடாக

பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வியினை நோக்குகின்ற வேளை மாணவர்கள் தங்களது ஆரம்பகல்வியினை பூர்த்திசெய்து க.பொ.த சாதாரண தரம் மற்றும் க.பொ.த உயர்தரத்தினை பூர்த்திசெய்து பல்கலைக்கழகம், கல்வியல் கல்லூரி மற்றும் ஏனைய உயர்கல்வி நிறுவனங்களின் ஊடாக பட்டப்படிப்பு, டிப்ளோமா போன்றவற்றினை பூர்த்திசெய்து தொழிலுலகிற்குள் நுழைவதாகும். இதில் அனேகமான எதிர்பார்ப்பு அரசதொழிலினை மைய்யமாக கொண்டே காணப்படும்.

இரண்டாவது முறையான தொழில் கல்வி (Vocational Education) ஊடாக வேலை உலகிக்குள் செல்வதென்பது குறிப்பாக பாடசாலைக்கல்வியினை பூர்த்தி செய்யாதவர்கள், இடைவிலகியவர் தேசிய தொழில் தகைமை (National Vocational Qualification) ஊடாக தங்களின் தகைமைகளைப் பூர்த்திசெய்து வேலையுலகிற்குள் செல்வதாகும். இத் துறையின் ஊடாகசெல்லும் மாணவர்கள் பட்டப்படிப்பினை பூர்த்திசெய்யும் வாய்ப்புக்கள் இலங்கையில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதன் படிமுறைகளை பார்க்கின்ற வேளையில்

மேற்குறிப்பிட்ட படிமுறைகளில் பல்வேறுபட்ட துறைகளில் நீங்கள் தங்களது தொழில் திறமைகளை வளர்த்துக்கொள்ளலாம்.

சிலவேளைகளில் நீங்கள் எந்த துறைகளை தெரிவு செய்யவேண்டும்?, உங்களுக்குள் இருக்கின்ற திறமை என்ன?, ஆளுமையின் பாங்கு எவ்வாறு இருக்கின்றது?, எதிர்கால வேலை உலகிற்கு ஏற்றவாறு எந்த தொழிலினை தேர்ந்தெடுக்கவேண்டும்? போன்ற விடயங்கiளை முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டும். இதற்காக நீங்கள் உங்கள் பிரதேசத்தில் உள்ள தொழில் வழிகாட்டல் ஆலோசகர் அல்லது தொழில் வழிகாட்டல் நிலையம் (மனிதவள அபிவிருத்தி பிரிவு- HRDA), இலங்கை தொழில் வழிகாட்டல் நிலையம் (SLICG) போன்றவற்றிக்கு சென்று தங்களுக்குரிய மேற்குறிப்பிட்ட விடயங்களை பரிட்சித்துக்கொண்டு அதன் பிற்பாடு சரியான வழிகாட்டலின் ஊடாக நீங்கள் தொழில் உலகிற்குள் பிரவேசிக்கலாம்.

“வேலை இல்லாமல் எதையும் செய்யமுடியாது” எனும் தற்கால சிந்திக்க வேண்டிய கூற்றுக்கு அமைய அனைவரும் கண்டிப்பாக வேலையுலகிற்குள் செல்ல தங்களை தயார் படுத்தி எதிர்கால தொழில் மற்றும் பொருளாதார சவால்களை திருப்தியாக முகம் கொடுத்து வெற்றி பெற்று சிறந்த வாழ்வு உலகிக்குள் சிறப்பாக செல்லலாம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

திரு. பி. விவேகானந்தன்
M.A In C.P.D.S (NE/SL-C.W), B.A.(Hones) In. Phil (EUSL/SL) and  NDCG (SLF-2018)
தொழில் வழிகாட்டல் ஆலோசகர்
தேசிய இளைஞர் படையணி மற்றும் இலங்கை தொழில் வழிகாட்டல் நிலையம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here