விஸ்வாசம் படத்தில் இரண்டு அஜித், ஐந்து சண்டை காட்சிகள்!

அஜித், நயன்தாரா நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் `விஸ்வாசம்’. இதில் அஜித் இரட்டை வேடங்களில் அண்ணன், தம்பியாக நடிப்பதாக செய்தி வருகிறது.
Image result for விஸ்வாசம்படத்தின் சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்புராயன் ஒரு பேட்டியில், நான் அறிமுகமானது அஜித்தின் `ஜி’ படத்தில் தான். `விஸ்வாசம்’ படத்திற்கு ஐதராபாத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. படத்தில் மொத்தம் 5 சண்டைக்காட்சிகள். ஐதராபாத்தில் ஒரு காமெடி சண்டைக்காட்சியை எடுத்துள்ளோம். இந்த படம் சிறுத்தை படம் போல. உணர்வுபூர்வமாக இருக்கும். படத்தில் வருகிற சண்டைக்காட்சிகள் சினிமாத்தனமாக இல்லாமல் உண்மைக்கு நெருக்கமாக இருக்கும்’ என்று கூறி இருக்கிறார்.
Image result for விஸ்வாசம்இந்த படத்தில் முக்கிய கதபாத்திரங்களில் யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்ற நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜூன் 22-ஆம் தேதி துவங்கவிருப்பதாக கூறப்படுகிறது
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here