யாழில் வைரவரின் வாகனத்தை காணவில்லை!

யாழ்ப்பாணத்தில் ஆலயமொன்றின் குதிரை வாகனம் திருடப்பட்டுள்ளது. கரணவாய் வடக்கு கரவெட்டியில் உள்ள சக்களாவத்தை ஞான வைரவர் ஆலயத்தின் குதிரை வாகனமே திருடப்பட்டுள்ளது.

கடந்த 17ம் திகதி இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதை காவுவதற்கு 8 தொடக்கம் 10 பேர் வரை தேவையென ஊரவர்கள் தெரிவிக்கின்றனர். அதிகாலை நேரம் கன்டர் ரக வாகனத்தில் திருடி சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து சில பழமையான பொருட்கள் தென்பகுதிகளுக்கு கடத்தப்பட்டு வரும் நிலையில், இப்படியான பெரிய திருட்டையும் ஆரம்பித்துள்ளது பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

இந்த வாகனம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் பொலிசாருக்கு அறிவிக்கும்படி கோரப்பட்டுள்ளனர்.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here