பணப்பையை பறித்தவர்களை படம் எடுத்து, பொலிசில் பிடித்துக் கொடுத்த வெளிநாட்டு யுவதி!

இலங்கைக்கு சுற்றுலா வந்த ஸ்கொட்லாந்து பெண்கள் இருவரிடம் பகல்கொள்ளையடித்த வாலிபர்கள் கைதாகியுள்ளனர். ஸ்கொட்லாந்து பெண்களின் துணிச்சலே கொள்ளையர்களை கைது செய்ய உதவியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 16ம் திகதி மத்திய மாகாணப்பகுதிக்கு சுற்றுலா சென்ற இந்த இரண்டு யுவதிகளும், அருக்கு பாலத்தின் அருகில் ஒரு யுவதி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். மற்றையவரிடமிருந்த பணப்பையை இழுத்து பறித்துக்கொண்டு கொள்ளையர்கள் ஓடியுள்ளனர்.

அப்பொழுது புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த யுவதி, கொள்ளையர்கள் ஓடுவதை புகைப்படம் எடுத்தார். அந்த புகைப்படத்துடன் எல்ல பொலிசாரிடம் சென்று முறைப்பாடு பதிவு செய்தார்.

புகைப்படத்தின் மூலம் கொள்ளையர்களை அடையாளம் கண்ட பொலிசார், விசாரணைகளை துரிதப்படுத்தினர். இந்த நிலையில் 19 வயதான திருடன் ஒருவன் பொலிசாரிடம் சரணடைந்தான்.

அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ஐந்து சந்தேகநபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here