இந்தவாரம் எந்த ராசிக்கு கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டப் போகிறது?


12 ராசி அன்பர்களுக்கான இந்த வார (நவம்பர் 22 – நவம்பர் 28) ராசி பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

தடைகள் விலகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீகச் சொத்துகளில் இருந்த தடைகள் விலகும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவீர்கள். பழைய கழிதலும் புதியன புகுதலும் என அனைத்தையும் மாற்றி புதிதாக வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றத்துடன் பதவி உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்களிடம் எதிர்பார்த்த ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சற்று சிரமம் ஏற்படும். எதையும் தேவைக்கு அதிகமாக செய்யக் கூடாது. விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும். நீரைத் தேக்கி வைத்துக்கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

அரசியல்வாதிகளுக்கு மாற்றங்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது. எதிர்க்கட்சிக்காரர்கள் அடங்கியே இருப்பார்கள் என்றாலும் எதிலும் கவனமாக இருக்கவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். சக கலைஞர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். பெண்மணிகள் குடும்பத்தில் நடக்கக்கூடிய சுப நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி அடைவார்கள். மாணவமணிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். மனதை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

பரிகாரம்: நவக்கிரகத்திலுள்ள குருபகவானை அர்ச்சித்து வணங்கவும்.
அனுகூலமான தினங்கள்: 23, 24.
சந்திராஷ்டமம்: 26, 27.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

பொருளாதாரம் சற்று ஏற்ற இறக்கமாகவே காணப்படும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற மிகவும் பாடுபடுவீர்கள். திட்டமிட்ட காரியங்கள் சிறிது மந்தமாகவே நடக்கும். இடைஞ்சல்களிலிருந்து விடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்காது. வியாபாரிகளுக்கு கொள்முதல் லாபம் சுமாராகவே இருக்கும். புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவதற்கு மிகுந்த சிரத்தையுடன் உழைக்கவும். விவசாயிகள் வங்கிகளில் கடன் வாங்கி விளைச்சலை அதிகரிப்பீர்கள். பழைய கடன்கள் மெதுவாகவே வசூலாகும்.

அரசியல்வாதிகளுக்கு கட்சித் தலைமையிடம் கவனமாக இருக்கவும். தொண்டர்களிடம் அன்பும் அக்கறையுடனும் நடந்துகொண்டு அனுசரித்துச் செல்லவும்.

கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்மணிகள் பொருளாதாரத்தில் சற்று மந்தமான சூழ்நிலையே தென்படும். கணவருடன் சண்டையில்லாமல் ஒற்றுமையை கடைபிடிக்கவும். மாணவமணிகள் படிப்பில் சற்றுக் கூடுதல் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: குருவாயூரப்பனை தரிசனம் செய்யவும்.
அனுகூலமான தினங்கள்: 24, 25.
சந்திராஷ்டமம்: 28.

மிதுனம் (மிருகசீரிஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். பணவரவு திருப்திகரமாகவே இருக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தையும் தைரியமாக முடிப்பீர்கள். மதிப்பு மரியாதைக்கு எந்த பங்கமும் வராது. உடல் ஆரோக்கியமும் மன நலனும் பலப்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். மேலதிகாரிகள் புதிது புதிதாய் கிடுக்கிப்பிடி போடுவார்கள். வியாபாரிகளுக்கு அரசாங்கத்தால் சில அனுகூலங்கள் உண்டாகும். தொழிலில் புதிய மாற்றங்கள் தென்படும். கூட்டாளிகளை அதிகம் நம்ப வேண்டாம். விவசாயிகள் எதிர்பார்த்த வசூல் கிடைத்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவர். கால்நடைகளாலும் பலனுண்டு.

அரசியல்வாதிகள் கட்சி முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டு மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவர். தொண்டர்களை அரவணைத்துச் செல்லவும். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த ஒப்பந்தங்களைப் பெறுவர்.

பெண்மணிகளுக்கு இது மகிழ்ச்சிகரமான காலமாகும். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். குழந்தைகளால் சந்தோஷம் கிடைக்கும். மாணவமணிகள் கல்வியில் முன்னேற அதிகமாக உழைக்கவும். விளையாட்டுகளில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: பெருமாள் கோயிலில் தாயார் சந்நிதியில் தீபமேற்றவும்.
அனுகூலமான தினங்கள்: 23, 25.
சந்திராஷ்டமம்: இல்லை.

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். திட்டமிட்ட பணிகள் சிறிது தாமதமாகி பிறகு முடியும். முன் வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். உயர்ந்தவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பணிகள் யாவும் வெற்றிகரமாக முடியும். எதிர்வரும் இடையூறுகளை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சுமுக நிலை ஏற்படும். அதிக லாபத்தை எதிர்பார்த்து வீண் கடன் தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும். விவசாயிகளுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிலிருந்து மான்யத்துடன் கூடிய கடன் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் பேச்சில் கட்டுப்பாட்டை மேற்கொள்ளவும். மேலிடத்திற்கு தகவல் அனுப்பும்போது எச்சரிக்கை தேவை. கலைத்துறையினருக்கு வரவேற்புகள் குறையும். புதிய முயற்சிகளை ஒத்தி வைக்கவும்.

பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையுடன் பழகுவார்கள். பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்கள். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் கலந்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பரிகாரம்: பார்வதி} பரமேஸ்வரரை தரிசனம் செய்யவும்.
அனுகூலமான தினங்கள்: 24, 26.
சந்திராஷ்டமம்: இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

செயல்களை நேர்த்தியாக முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். எதிர்பார்த்த உதவிகளைப் பெறுவீர்கள். எதிரிகள் ஒதுங்கிப்போவார்கள். பொருளாதாரம் சீராகவே இருந்து வரும். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள்.

உத்தியோகஸ்தர்கள் சிறப்பாக பணியாற்றுவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் தேடி வரும். சில நிரந்தரச் சலுகைகளையும் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய யுக்திகளைப் புகுத்தி, வருமானத்தைப் பெருக்க முனைவர். விவசாயிகள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். கால்நடைகளின் பராமரிப்புச் செலவு கூடும். புதிய உபகரணங்களை வாங்கி விளைச்சலைப் பெருக்குவர்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்ய முனைவர். கட்சியில் சீர்திருத்தம் செய்ய நினைக்க வேண்டாம். கலைத்துறையினர் செயல்களில் முன்னேற்றம் தென்படும். சில புதிய ஒப்பந்தங்கள் கைவந்து சேரும்.

பெண்மணிகள் உடல் நலம் பாதிக்கப்படலாம். தெய்வ பலத்தைக் கூட்டிக் கொள்ளவும். மாணவமணிகளின் மதிப்பெண்கள் குறையும். பெற்றோர், ஆசிரியர் சொல்படி நடக்கவும். உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம்.

பரிகாரம்: துர்க்கையம்மனை விளக்கேற்றி வழிபடவும்.
அனுகூலமான தினங்கள்: 25, 26.
சந்திராஷ்டமம்: இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பொருளாதார நிலைமை சீராக இருக்கும் என்றாலும் செலவுகளைக் குறைத்து, விரயங்களைத் தவிர்த்திடுங்கள். தொழிலில் ஒரே இலக்குடன் முனைந்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். எதிலும் கவனமாக இருக்கவும். தன்னம்பிக்கை குறையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளிடம் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். பணவரவு சீராகும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் லாபகரமாக முடியும். எனினும் புதிய முதலீடுகளில் ஈடுபட வேண்டாம். விவசாயிகளுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். புதிய குத்தகைகளை நாடிச் செல்லலாம். கால்நடைகளின் மூலமும் லாபம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளுக்கு எதிரிகளால் இருந்து வந்த தடைகள் நீங்கும். கட்சிமேலிடத்தின் ஆசி கிடைக்கும். தொண்டர்களிடம் நல்லுறவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு சக கலைஞர் மூலம் நல்ல வாய்ப்பு தேடி வரும்.

பெண்மணிகள் புதிய ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வார்கள். தந்தை வழி உறவினர்களால் நன்மை உண்டு. மாணவமணிகள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். சக மாணவர்களுடன் கலந்தாலோசித்து படிக்கவும்.

பரிகாரம்: ஞாயிறன்று சூரியபகவானையும் புதனன்று பெருமாளையும் வழிபடவும்.
அனுகூலமான தினங்கள்: 23, 25.
சந்திராஷ்டமம்: இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

தந்தையோடு அனுசரித்துச் செல்லவும். வாகனங்கள் ஓட்டும்போது கவனமாக இருக்கவும். உடல்நலத்தில் அக்கறை காட்டவும். உறவினர்கள், நண்பர்கள் பக்க பலமாக இருப்பார்கள். வருமானத்தை மீறி அதிக செலவு செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை அதிகரித்தாலும் அவற்றைத் திறம்பட செவ்வனே செய்து முடிக்கும் ஆற்றல் பெறுவீர்கள். வியாபாரிகள் சிறு சிறு தடைகள் ஏற்பட்டு பின்பு அவற்றைச் சமாளிக்கும் தைரியம் ஏற்படும். லாபம் ஏற்ற இறக்கமாகவே இருக்கும். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுக்க வேண்டாம். மகசூல் மந்தமாகவே இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு எதிரிகளின் தொல்லைகளைச் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். கட்சி மேலிடம் உங்கள் பேச்சைக் கண்காணிக்கும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் செய்வதில் தாமதம் ஏற்படும். கைக்கு எட்டியது வாய்க்குக் கிடைக்காதது போல் நழுவி விடும்.

பெண்மணிகள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளைக் காண்பார்கள். உறவினர்களிடம் வீண் சண்டைகளைத் தவிர்க்கவும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். ஆன்மிகத்தில் மனதைச் செலுத்தவும்.

பரிகாரம்: நமசிவாய மந்திரத்தை ஜபித்து வழிபடவும்.
அனுகூலமான தினங்கள்: 22, 26.
சந்திராஷ்டமம்: இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

முடிவுகளை நடுநிலையுடன் எடுத்து அனைவரின் மதிப்புக்குரியவர்களாக இருப்பீர்கள். தொடர்ந்த அலைச்சல்களுக்கு இடையில் தேவையான ஓய்வுகளை எடுக்கவும். திட்டமிட்ட வேலைகளில் தாமதம் ஏற்பட்டாலும் எதிர்பார்த்த பலன் அமையும்.

உத்தியோகஸ்தர்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில் எந்தச் சுணக்கமும் இருக்காது. திட்டமிட்ட வேலைகளை சற்று முன்கூட்டியே செய்து தாமதத்தைத் தவிர்க்கவும்.

வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சற்று சிரமங்களைச் சந்திப்பார்கள். விவசாயிகளின் பழைய கடன்கள் வசூலாகி பொருளாதார நிலைமை சீரடையும்.

அரசியல்வாதிகள் விருந்து கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதையை அதிகரித்துக் கொள்வார்கள். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். முயற்சியும் உழைப்பும் நன்மை பயக்கும்.

பெண்மணிகள் வீண் பேச்சைக் குறைத்துக் கொள்ளவும். தேவையற்ற வாக்குவாதங்களில் சிக்கிக் கொள்ளும் சூழல் ஏற்படும். மாணவமணிகளுக்கு படிப்பில் உற்சாகம் ஏற்படும். உபயோகமான வேலைகளில் ஈடுபடுதல் நல்லது.

பரிகாரம்: வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானை வழிபடவும்.
அனுகூலமான தினங்கள்: 23, 27.
சந்திராஷ்டமம்: இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பொருளாதார நிலை சீராக இருக்கும். புதிய வாகனச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் ஆதரவுடன் முக்கிய வேலைகளைச் செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். ஆகார விஷயங்களில் கட்டுப்பாடு தேவை.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் குறைகளைப் பெரிது படுத்தாதீர்கள். பணவரவு சீராக இருக்கும். வியாபாரிகள் வீண் ஆசாபாசங்களை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.

வியாபாரத்தை நேரடி கண்காணிப்பில் மேற்கொள்ளவும். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெற பல சிரமங்கள் ஏற்படும். கால்நடைகள், பால் வியாபாரம் மூலம் லாபம் உண்டாகும்.

அரசியல்வாதிகளின் பொதுச் சேவையை மக்கள் பாராட்டுவார்கள். மேலிடத்தின் மூலம் புதிய பொறுப்புகளைப் பெறுவார்கள். கலைத்துறையினர் எல்லா வேலைகளையும் நேர்த்தியாகச் செய்து முடிப்பர். திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் இருக்கும். பெண்மணிகள் குடும்பத்தில் நிம்மதி காண்பர். ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வார்கள்.
மாணவ மணிகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய பெற்றோர், ஆசிரியர் கைகொடுப்பர்.

பரிகாரம்: குருபகவானையும் ஆஞ்சநேயரையும் வழிபடவும்.
அனுகூலமான தினங்கள்: 22, 26.
சந்திராஷ்டமம்: இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

சிக்கலான சூழ்நிலையில்கூட பாதிப்படையாமல் மீண்டு வந்து விடுவீர்கள். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உதவி செய்வீர்கள். எல்லா செயல்களிலும் உங்களின் தனித்தன்மை வெளிப்படும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டு.

உத்தியோகஸ்தர்கள் இடைவிடாமல் உழைக்க வேண்டி வரும். கோரிக்கைகள் நிறைவேறத் தாமதமாகும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களைத் திருப்திபடுத்த முனைவீர்கள். கொடுக்கல் வாங்கல்களில் கவனம் தேவை. விவசாயிகள் பூச்சிக்கொல்லி பயன்படுத்தி உற்பத்திப் பொருள்களில் நல்ல பலன் அடையலாம்.

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்கள் யாவிலும் சாதகமான பலன்கள் ஏற்படும். கட்சியில் முக்கியமான சில பொறுப்புகளையும் பெறுவீர்கள். கலைத்துறையினர் தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள். ரசிகர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வார்கள்.

பெண்மணிகள் உடல்நலனில் கவனம் செலுத்தவும். தெய்வ பலத்தைப் பெருக்கிக் கொண்டு பிரச்னைகளை குறைத்துக் கொள்ளவும். மாணவமணிகள் பெற்றோரிடம் அனுசரித்துச் செல்லவும். ஆன்மிகத்தில் மனதை ஈடுபடுத்திக் கொள்ளவும்.

பரிகாரம்: புதனன்று ஸ்ரீ ராமபிரானை வழிபடவும்.
அனுகூலமான தினங்கள்: 22, 28.
சந்திராஷ்டமம்: இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உங்கள் மதிப்பும் கௌரவமும் உயரும். வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். நெருங்கியவர்களுடன் விரோதத்தைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருளாதாரம் பெருகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பணியிலிருந்த முட்டுக்கட்டைகள் விலகும். பதவி உயர்வு உண்டாகும். மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். வியாபாரிகள் போட்டிகளைச் சமாளித்து பொருள்களை விற்பனை செய்வர். கூட்டாளிகளை அரவணைத்துச் செல்லவும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளின் செயல்பாடுகளில் கட்சி மேலிடம் திருப்தியடையும். புதிய பதவிகள் தேடி வரும். கலைத்துறையினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். கைநழுவிப்போன ஒப்பந்தங்கள் தேடி வரும்.

பெண்மணிகளுக்கு பணப்புழக்கம் நன்றாக இருக்கும். குடும்பத்தாருடன் சுற்றுலா சென்று மகிழ்வீர்கள். மாணவமணிகள் தங்கள் முயற்சிக்குத் தகுந்தபடி கல்வியில் முன்னேறுவார்கள். விளையாட்டுகளிலும் தைரியத்துடன் ஈடுபட்டு வெற்றி அடைவார்கள்.

பரிகாரம்: பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபடவும்.
அனுகூலமான தினங்கள்: 27, 28.
சந்திராஷ்டமம்: 22, 23.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொருளாதாரம் ஏற்ற இறக்கமாகவே இருக்கும். எடுத்த காரியங்கள் யாவும் மெதுவாகத்தான் வெற்றியைக் கொடுக்கும். உறவினர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்கவும். உடல் ஆரோக்கியம் சிறக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் அதிகாரிகள் பக்கபலமாக இருப்பார்கள். உத்தியோகப் பிரிவில் மாற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு சிரமங்கள் குறையும். புதிய முயற்சிகளை நன்கு யோசித்து எடுக்கவும். கூட்டாளிகளால் நன்மை உண்டாகும். விவசாயிகளுக்கு மகசூல் குறையும். புதிய பயிர்களை பயிரிட வேண்டாம். கடன் வாங்குவதையும் தவிர்க்கவும்.

அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் வந்து சேரும். உடல்சோர்வைப் பாராட்டாமல் கட்சிப் பணிகளில் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள்.

பெண்மணிகளுக்கு கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். உறவினர்களுடன் பரஸ்பரம் சற்று அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகள் கோரிக்கைகள் யாவும் நிறைவேறும். நீண்ட காலத் திட்டங்களுக்கு இது சரியான காலகட்டமாகும்.

பரிகாரம்: பார்வதி} பரமேஸ்வரரை மலர்மாலை சாற்றி வழிபடவும்.
அனுகூலமான தினங்கள்: 27, 28.
சந்திராஷ்டமம்: 24, 25.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here