வடமாகாண சம்பியன் பரு.மெதடிஸ்த பெண்கள்!

வட­மா­கா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான பூப்பந்­தாட்­டத் தொட­ரில் 20 வய­துக் குட்பட்ட பிரிவு பெண்­கள் பிரி­வில் பருத்­தித்­துறை மெத­டிஸ்த பெண்­கள் உயர்­த­ரப் பாட­சாலை அணி கிண்­ணம் வென்­றது.

மன்­னார் உள்­ளக விளையாட்­ட­ரங்­கில் நேற்று இடம்­பெற்ற இந்த இறு­தி­யாட்­டத்­தில் பருத்­தித்­துறை மெதடிஸ்த பெண்­கள் உயர்­த­ரப் பாட­சா­லை­யும் யாழ்ப்­பா­ணம் இந்து மக­ளிர் கல்­லூ­ரி­யும் பலப்பரீட்சை நடத்­தின.

மூன்று தனி­ந­பர் ஆட்­டங்­க­ளை­யும், இரண்டு இரட்­டை­யர் ஆட்­டங்­க­ளை­யும் கொண்­ட­தாக இறு­தி­யாட்­டம் அமைந்­தது.

முதல் இரண்டு ஒற்­றை­யர் ஆட்­டங்­க­ளை­யும் பருத்தித்துறை மெத­டிஸ்த பெண்­கள் உயர்­த­ரப் பாட­சா­லை­யைச் சேர்ந்த ராகவி, சாருகா இரு­வ­ரும் முறையே 2:0, 2:1 என்ற செற் கணக்­கில் தம­தாக்­கி­னர்.

மூன்­றா­வது ஒற்­றை­யர் ஆட்­டத்தை இந்து மக­ளி­ரின் வீராங்கனை பிர­சாந்­தினி 2:0 என்ற செற் கணக்­கில் தன­தாக்­கி­னார்.

இரட்­டை­யர் ஆட்­டத்­தில் வெற்­றி­யைத் தீர்­மா­னிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. முத­லா­வது இரட்­டையர் ஆட்­டத்­தில் மெத­டிஸ்த பெண்­கள் உயர்­த­ரப் பாட­சா­லை­யின் வீராங்­க­னை­கள் பவித்ரா, சாருகா இணையை எதிர்த்து இந்து மக­ளி­ரின் வீராங்­க­னை­கள் கம்­சா­யினி, தமி­ழினி இணை மோதி­யது.

2:0 என்ற செற் கணக்கில் மெத­டிஸ்த பெண்­கள் இணை வென்­றதை அடுத்து ஒட்­டு­மொத்­த­மாக 3:1 என்ற செற் கணக்­கில் வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றது மெத­டிஸ்த பெண்­கள் உயர்­த­ரப் பாட­சாலை அணி.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here