யாழ் கச்சேரிக்குள் மாறி அழுத்தியதால் பெரும் வில்லங்கம்: மோட்டார் சைக்கிள்களை இழந்த பெண் உத்தியோகத்தர்கள்!

பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக அச்சிலேற்றரை சாரதியின் தவறாக அழுத்தியதால் யாழ்.மாவட்ட செயலகத்திற்குள் இன்று பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. ஹன்டர் வாகனம் தறிகெட்டு பாய்ந்ததால் மாவட்ட செயலக வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த உத்தியோகத்தர்களின் 12 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 துவிச்சக்கர வண்டிகள் முற்றாகச் சேதமடைந்தன.

இந்தச் சம்பவம் இன்று (19) செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.

யாழ்.மாவட்ட செயலகத்துக்கு ஹன்டர் வாகனம் ஒன்றில் பொருள்கள் ஏற்றிவரப்பட்டன.

உத்தியோகத்தர்களின் வாகனத்தரிப்பிடத்துக்கு அருகின் ஹன்டர் வாகனத்தை நிறுத்த சாரதி திட்டமிட்டுள்ளார்.

வாகனத்தின் பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக அச்சிலேற்றரை சாரதி மாற்றி அழுத்தியதால் வாகனம் வேகக் கட்டுப்பாட்டையிழந்து உத்தியோகத்தர்களின் வாகனத் தரிபிடத்துக்குள் புகுந்தது.

சாரதியின் கவயீனத்தால் இந்த விபத்து ஏற்பட்டது. உத்தியோகத்தர்களின் 12 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 துவிச்சக்கர வண்டிகள் முற்றாகச் சேதமடைந்தன.

அவற்றில் பல பெண் உத்தியோகத்தர்களின் மோட்டார் சைக்கிள்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here