மல்லாகத்தில் கணக்கு இன்னும் முடியவில்லை; பொலிஸ் லிஸ்றில் இருப்பர்கள் 40 பேர்: நீதிமன்றத்தில் பொலிசாரே தெரிவித்தனர்!

மல்லாக துப்பாக்கிச்சூட்டின் பின்னர் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்தது தெரிந்ததே. பொலிசாரின் கைது பட்டியல் இந்த ஐந்து இளைஞர்களுடன் முடியப்போவதில்லை. அந்த பகுதியை சேர்ந்த 40 பேரை பொலிசார் இலக்கு வைத்துள்ளனர். இதனை நேற்று நீதிமன்றத்தில் பொலிசாரே குறிப்பிட்டனர்.

மல்லாகம் சகாய மாதா ஆலயத்திற்கு அருகில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார். துப்பாக்கிச்சூட்டிற்கு முன்னர் குழு மோதல் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மல்லாகம் நீதவானின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.  கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் செல்ல பொலிசார் மறுப்பு தெரிவித்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 40 பேர் வரையில் கைது செய்யப்படவுள்ளனர் என்றும், அவர்கள் கைது செய்யப்படும் வரை, சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க வேண்டுமென்றும் கோரினர். நீதவான் அதை ஏற்று அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here