ஆனந்தசுதாகரனை விடுவிக்க முடியாது- மைத்திரி: விக்னேஸ்வரன் கடைசியாக கேட்டதற்கு சம்மதித்தார்!

ஆனந்தசுதாகரனை போன்ற மேலும் பல அரசியல் கைதிகள் இருப்பதனால் அவரை உடனடியாக விடுதலை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனிடம் நேரில் கூறியுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதியை, வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சந்தித்தபோது, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளின் நன்மை கருதி அவரை உடனடியாக பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி கேட்டிருந்தார்.

எனினும், முதலமைச்சரின் கோரிக்கைக்கு ஜனாதிபதி சாதகமாக பதிலளிக்கவில்லை.

ஆனந்தசுதாகரனை போல மேலும் பல கைதிகள் சிறையில் உள்ளனர். ஆனந்தசுதாகரனை விடுவித்தால், அவரை போல தங்களையும் விடுவிக்க வேண்டுமென அவர்கள் கோருவார்கள்.  இதனால் ஆனந்தசுதாகரனை உடனடியாக விடுவிக்க முடியாதுள்ளதாக முதலமைச்சரிடம் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதன்பின்னர் ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார் முதலமைச்சர். அந்த பிள்ளைகள் தமது தந்தையை சிரமமின்றி பார்வையிட வசதியாக, ஆனந்தசுதாகரனை அருகிலுள்ள சிறைச்சாலையொன்றிற்கு மாற்றுமாறு கேட்டுக்கொண்டார். இதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here