உயிரிழந்த இளைஞர் மதுபோதையில் இருந்தாரா?: மருத்துவ அறிக்கை என்ன சொல்கிறது தெரியுமா?

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் முதுகுப் பகுதியால் பாய்ந்த குண்டு இடது பக்க நெஞ்சுப் பகுதியால் வெளியே வந்துள்ளது. மற்றொரு குண்டு தோள்மூட்டுப் பகுதியால் சறுக்கி சென்றுள்ளது. 15 நிமிடங்களுக்குள் அவரை வைத்தியசாலையில் சேர்ப்பித்திருந்தால் காப்பாற்றியிருக்க முடியும் என சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் இடம்பெற்ற உடற்கூற்று பரிசோதனையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மல்லாகம் சகாய மாதா ஆலயத்திற்கு எதிரில் சுன்னாகம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த,  பாக்கியராசா சுதர்சன் (32) என்ற இளைஞன் உயிரிழந்திருந்தார். அவரது மார்பில் குண்டு பாய்ந்திருந்தது.  மல்லாகம் குளமங்கால் பகுதியைச் சேர்ந்த அவர் இரண்டு சகோதரிகள், வயதான தந்தையுடன் வாழ்ந்து வந்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி மயூரன் முன்னிலையில் இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

“இளைஞனின் முதுகுப் பக்கதால் பாய்ந்த சென்ற குண்டு அவரனின் இடது பக்க நெஞ்சுப் பகுதியால் வெளியேறியுள்ளது. அத்துடன் மற்றொரு குண்டு தோள்மூட்டுப் பகுதியால் சறுக்கியபடி சென்றுள்ளது.

இருதயத்தில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை.

நுரையீரல் பகுதியிருந்து அதிகளவு குருதிப் போக்கால்தான் இளைஞன் உயிரிழந்துள்ளார். 15 நிமிடங்களுக்குள் அவரை வைத்தியசாலையில் சேர்த்திருந்தால் காப்பாற்றியிருக்க முடியும்.

இளைஞனின் முகத்தில் இரண்டு இடங்களில் கொட்டானால் தாக்கப்பட்ட காயங்கள் உள்ளன. இளைஞன் தாக்குதலுக்குள்ளாகிதால் அவரது உடைகள் கிழிவடைந்துள்ளன. மேலும் அவர் மதுபோதையில் இருந்துள்ளார். அவரது குருதியில் அல்ககோல் செறிவு அதிகமாக காணப்பட்ட“ என்று உடற்கூற்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here