சிறுபான்மையினர் இல்லாமல் ஆட்சியமைக்கலாமென்பதை நிரூபித்து விட்டோம்; இனி பொதுபலசேனாவை கலைக்கிறோம்: ஞானசாரர் அதிரடி அறிவிப்பு!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் பொதுபலசேனா அமைப்பை கலைப்பதாக அறிவித்துள்ளார் ஞானசார தேரர்.

சிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கிலே் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பின் நோக்கம் நிறைவேறி விட்டது என இன்று (19) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அறிவித்துள்ளார் ஞானசார.

சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளின்றி நாட்டில் ஆட்சியமைக்க முடியாது என இருந்த மாயை உடைத்தெறியப்பட்டு விட்டதாகவும் இப்போது சிங்கள இனத்துக்கு நல்ல தலைவர் ஒருவர் உருவாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், பொதுத் தேர்தலின் பின் சிறந்த அமைச்சரவை ஒன்றை உருவாக்கி நாட்டை வழி நடாத்துவார் எனும் நம்பிக்கையிருப்பதால் இனிமேல் தமது அமைப்புக்கான தேவையில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் சிறுபான்மையினங்களிற்கு எதிரான அச்சுறுத்தலை பொதுபலசேன விடுத்ததாக பரவலான குற்றச்சாட்டுக்கள் இருந்ததுடன், அதன் பின்னணியில் இருந்தவர்கள் பற்றிய தகவல்களும் அரசல் புரசலாக வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here