நீதியரசர் பேசுகிறார்- முதலமைச்சரின் நூல் வௌியீட்டு அழைப்பிதழ்!

வடமாகாண முதலமைச்சரின் உரைகளின் தொகுப்பான “நீதியரசர் பேசுகிறார்“ நூல் வெளியீடு வரும் 24ம் திகதி யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பிரித்தானியாவில் வசிக்கும் சட்டத்தரணி இரத்தினசிங்கம் (முதலமைச்சரின் மாணவர்) இந்த நூலை தொகுத்துள்ளார். இந்த நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் கலந்து கொள்கிறார், அவர் தாமதமாகவே சம்மதம் தெரிவித்ததால் அவரது பெயர் அழைப்பிதழில் இடம்பெறவில்லையென தமிழ்பக்கம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது. அதனை உறுதிசெய்கிறது அழைப்பிதழ்.

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக யாருக்கும் தபாலில் அனுப்ப முடியவில்லையென்றும், மின்னஞ்சல்  மூலம் தனிப்பட்ட அழைப்புக்களை முதலமைச்சர் அனுப்பி வருகிறார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here