வவுனியாவில் ஐயப்பசாமிகளிற்கு மாலை அணிவிப்பு

smart

இந்துக்களால் முன்னெடுக்கப்படும் சபரிமலை சுவாமி ஐயப்பன் விரத பூஜை வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் ஆலயம் மற்றும் உக்குளாங்குளம் பிள்ளையார் ஆலயத்திலும் இடம்பெற்றது.

இதன்போது மணி குருசாமி மற்றும் கிருஸ்ணா குருசாமிகளினால் ஐயப்ப சாமிகளிற்கு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. விசேட பூஜை நிகழ்வுகளும் நடத்தப்பட்டிருந்தது.

குறித்த பூஜை நிகழ்வு கார்த்திகை ஒன்றான நேற்று இடம்பெற்றிருந்தது. மனிதனை புனிதராக்கக் கூடிய விரதமான இவ் ஐயப்பன் விரதமானது தொடர்ந்தும் 41 நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த பூஜை நிகழ்வில் ஐயப்பசாமிகள் மற்றும் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஐயப்பனின் ஆசியை பெற்றுக்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here