ஞானசார தேரரிற்காக கொழும்பை முற்றுகையிட்ட பிக்குகள்

ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பில் புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திற்கு அருகில் அரசமரத்து சந்தி பகுதியில் பிக்குகளினால் சத்தியாக்கிரக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பொதுபல சேனா அமைப்பின் பிக்குகளும் மற்றும் பல்வேறு பௌத்த அமைப்புகளை சேர்ந்த பிக்குகளுமாக பல நூற்றுக் கணக்கான பிக்குகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகிலிருந்து பேரணியாக சென்ற பிக்குகள் அரச மரத்து சந்தி பகுதியில் வீதியில் அமர்ந்து சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனால் அந்த பகுதியூடான வாகன போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன. 35476455_274565013087753_2200738347662442496_nDSC_7566DSC_7607DSC_7644

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here