50 நாட்டு போட்டியாளர்களை வென்று சர்வதேச செஸ் சம்பியனான இலங்கை மாணவி!

கண்டி உயர்கல்லூரியின் உயிரியல் பிரிவு மாணவியான சைனப் சௌமி, இத்தாலியில் நடந்த சர்வதேசரீதியிலான சர்வதேச சுற்றுத் தொடரில் முதலிடம் பிடித்துள்ளார். ஸ்பொலேடோ நகரில் இடம்பெற்ற 2017 ஆம் ஆண்டின் சர்வதேச அமெச்சூர் சதுரங்க போட்டியில் (FIDE World Amateur Chess Championship– 2017) சர்வதேச செஸ் தரப்படுத்தலில் 1700-2000 புள்ளிகளுக்கான பெண்கள் பிரிவில் 50 நாடுகளைச் சேர்ந்த 200 போட்டியாளர்களில் முதலிடம் வென்று சர்வதேச சம்பியன் கிண்ணத்தை வென்றார். தனது17 வயதில் இச் சாதனையை மேற்கொண்ட சைனப், சர்வதேச ரீதியாக இலங்கைக்கு10 வருடங்களின் பின்னர்இப்பெருமையை ஈட்டியும் கொடுத்துள்ளார்.

இவர் அகில இலங்கை பாடசாலை ரீதியில் 18 வயதிற்குட்பட்ட பிரிவில் முதலிடமும், அகில இலங்கை யூத் செஸ் விளையாட்டில் இரண்டாமிடமும் பெற்றுள்ளார்.

இதன்மூலம் ஆசிய மட்டத்தில் தாய்லாந்தில் இடம்பெற்ற போட்டியில் பங்குபற்ற வாய்ப்புக் கிடைத்தும் பங்கேற்கவில்லை. மேலும் கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ள உலகளாவிய செஸ் போட்டியிலும் க.பொ.த. உயர்தரபரீட்சை காரணமாக பங்குபற்றாமல் இருக்க இவர் முடிவு செய்துள்ளார்.

இந்த மாணவியின் சாதனை பட்டியல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

தேசியமட்டம்

2012: Sri Lanka Schools Individual Chess Championship, 12 வயதிற்குக் கீழ்– 1st Runners Up2013: Sri Lanka Schools Individual Chess Championship,13 வயதிற்குக் கீழ் – MeritSri Lanka Schools Individual Chess Championship (Selection Tournament for Asian Games),13 வயதிற்குக் கீழ் – MeritSri Lanka National Youth Rapid Chess Championship – Champion2014: National Schools Team Chess Championship, 15 வயதிற்குக் கீழ்–2nd Runners Up, best on board 4.National Youth Blitz Chess Championship, , 14 வயதிற்குக் கீழ்– 1st Runners UpSri Lanka National Youth Rapid Chess Championship, 14 வயதிற்குக் கீழ்– 1st Runners Up2015: National Schools Team Chess Championship, 19 வயதிற்குக் கீழ்–Champion, best on boardInter School Team Chess Championship, 17 வயதிற்குக் கீழ் – best on boardSri Lanka Schools Individual Chess Championship, 15 வயதிற்குக் கீழ் – MeritNational Youth Blitz Chess Championship, , 16 வயதிற்குக் கீழ்–2nd Runners Up2016: Sri Lanka Schools Individual Chess Championship,17 வயதிற்குக் கீழ் – MeritSri Lanka Women National B Chess Championship, 2nd Runners UpNational Youth Chess Championship, 16 வயதிற்குக் கீழ் – ChampionSri Lanka Women National Chess Championship – Champion

சர்வதேச மட்டம்

2009: Asian Schools Chess Championship – இலங்கைப் பிரதிநிதி2013: Asian Schools Chess Championship – இலங்கைப் பிரதிநிதி

13 வயதிற்குக் கீழ்– Blitz – 1st Runners up, Classical – 3rd Runners up

2016: Asian Schools Chess Championship (மொங்கோலியா)– இலங்கைப் பிரதிநிதி

16 வயதிற்குக் கீழ்– Blitz – 8th Runners up, Classical – 6th Runners up

World Youth Chess Championship (ரஷ்யா) – இலங்கைப் பிரதிநிதிWorld Olympiad Chess Championship (அஸர்பைஜான்) – இலங்கைக் குழு உறுப்பினர்2017: Asian Zonals 3.2 Chess Championship (நேபாளம்) – இலங்கைப் பிரதிநிதி

பெண்கள்: 5th Runners Up

World Amateur Chess Championship (இத்தாலி) – இலங்கைப் பிரதிநிதி

பெண்கள்: சர்வதேச தரம் Under 2000 Category – Champion

World School Chess Championship (ரோமேனியா) – இலங்கைப் பிரதிநிதி

17 வயதிற்குக் கீழ்– Blitz –2ndRunners Up

Asian Indoor Games (டர்க்மேனிஸ்தான்) – இலங்கைப் பிரதிநிதி

 

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here