இளைஞரை சுட்ட பொலிஸ்காரர் நீதிமன்றில் முற்படுத்தப்படவில்லை; பிரேத பரிசோதனை ஆரம்பம்!

மல்லாகம் சகாய மாதா ஆலயத்துக்கு அருகில் நேற்றிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்ட இளைஞனது சடலத்தின் உடற்கூற்றுப் பரிசோதனைகள் சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மல்லாகம் குளமங்கலம் பகுதியைச் சேர்ந்த பா.சுதர்சன் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். குறித்த இளைஞனது சடலத்தைப் பெறுவதற்கு உறவினர்கள் இன்று காலையில் இருந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சடல அறை முன்பாகக் காத்திருந்தனர்.

நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரே பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என்று மருத்துவமனையினர் தெரிவித்தனர். தற்போது நீதிமற்ன உத்தரவு கிடைக்கப் பெற்றுள்ளதால் பரிசோதனைகள் சட்ட மருத்துவ அதிகாரிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று எமது செய்தியாளர் தெரிவித்தார்.மல்­லா­கத்­தில் இளை­ஞர் உயி­ரி­ழக்க கார­ண­மான துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய பொலிஸ் அதி­காரி இன்னமும் நீதிமன்றில் முற்படுத்தப்படவில்லை.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here