அடுத்த முதலமைச்சர் வேட்பாளர்: சுமந்திரனின் தெரிவு இவர்தான்; வடக்கை கிறிஸ்தவ மயமாக்குகிறாரா?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக, வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதனின் பெயர் முன்மொழியப்படுவதற்கான ஆரம்ப கட்ட செயற்பாடுகள் இரகசியமாக தொடங்கிவிட்டன என்ற தகவலை சில வாரங்களின் முன்னரே தமிழ் பக்கம் வெளியிட்டிருந்தது. இந்த செயற்பாடு எவ்வளவு விரைவாக, வீரியமாக நகர்த்தப்படுகிறது என்பது நேற்று முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

பத்திநாதனை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க எம்.ஏ.சுமந்திரன் தீவிர முயற்சிகளை ஆரம்பித்துள்ளார்.

நேற்றையதினம் இந்த முன்மொழிவை கிளிநொச்சியை சேர்ந்த வடமாகாணசபை உறுப்பினர் குருகுலராஜாவிடம் நேரடியாகவே சுமந்திரன் வைத்தார்.

நேற்று கிளிநொச்சியிலுள்ள குருகுலராஜாவின் வீட்டில் எம்.ஏ.சுமநதிரனிற்கு விருந்தளிக்கப்பட்டுள்ளது. அந்த விருந்தின்போதே சுமந்திரன் இந்த தகவலை வெளியிட்டு, குருகுலராஜாவின் அபிப்பிராயத்தை கேட்டுள்ளார்.

கிறிஸ்தவரான சுமந்திரன், கிறிஸ்தவரான குருகுலராஜாவிடம், கிறிஸ்தவரான பத்திநாதனின் முன்மொழியை வைத்துள்ளார் என்பதை கவனிக்க வேண்டும். இது மதரீதியிலான பிரிவினையல்ல. இந்த பதிவை படிக்கும் நண்பர்கள், இது சிவசேனையின் பதிவைப்போல இருப்பதாக கருதினால் மன்னிக்க வேண்டும். ஏற்கனவேஆனல்ட்டை தனது சொந்த முடிவில் சுமந்திரன் யாழ் மாநகரசபை முதல்வராக கொண்டு வந்தார்.

இப்பொழுது பத்திநாதனை வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க இரகசியமாக திட்டமிடப்படுகிறது.

யார் அடுத்து முதலமைச்சர் வேட்பாளர் என்ற சர்ச்சையை சுமந்திரன் நேரத்துடனேயே கிளப்பியது காரியத்துடன்தான். மாவையின் பெயர் முன்மொழியப்பட்டு, அவர் வெற்றி வேட்பாளர் அல்லவென்ற அபிப்பிராயம் பொதுவெளியில் உருவான பின்னர், பத்திநாதனின் பெயரை பிரேரிக்கலாமென்பதாக இருக்கலாம்.

ஏற்கனவே தமிழ்பக்கத்தில் பத்திநாதனின் பெயர் வெளியான பின்னர், பத்திநாதனை பலர் தொடர்புகொண்டு வினவியுள்ளனர். அதேபோல, அண்மையில் நடந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புகுழு கூட்டத்திலும் பத்திநாதனின் பெயர் அடிப்பட்டது. எனினும், பத்திநாதன் இதை மறுத்து வந்துள்ளார்.

ஆனாலும், பத்திநாதனுடன் இதைப்பற்றி சுமந்திரன் ஏற்கனவே பேசி, பத்திநாதனின் சம்மதத்தை பெற்றிருந்தார் என்பதை தமிழ்பக்கம் உறுதிசெய்கிறது.

நேற்றைய சந்திப்பில் – பத்திநாதனை முதலமைச்சர் வேட்பாளராக்குவது என்று ஒரு திட்டத்தையும், முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலில் களமிறங்குவதென்று இன்னொரு திட்டத்தை பற்றியும் சுமந்திரன் ஆலோசனை நடத்தினார். பத்திநாதனை முதலமைச்சர் ஆக்க முடியாவிட்டால், குறைந்தது அதிகாரமுள்ள அமைச்சராகவேனும் ஆக்க வேண்டுமென நேற்று சுமந்திரன் குறிப்பிட்டார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here