நாளை பாடசாலைகள் விடுமுறை: வாக்கெண்ணும் மையங்கள் இவைதான்!

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச பாடசாலைகள் நாளை (15) மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது

பாடசாலைகள் வாக்களிப்பு நிலையங்களாகவும்,  வாக்கு எண்ணும் மையங்களாகவும் பயன்படுத்தவுள்ளதால், தேர்தல் ஆணையம் கோரியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, அனைத்து பாடசாலைகளும் இன்று (14) பாடசாலை நேரத்திற்குப் பிறகு கிராமசேவகர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவம்பர் 16 ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகளின் விபரம் பின்வருமாறு:

கொழும்பு- டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி, ரோயல் கல்லூரி, கம்பாஹா-பத்தலகேதர் வித்யலோகா மகா வித்யாலயம், களுத்துறை வடக்கு- முசாயஸ் கல்லூரி, கண்டி- மொடல் பாடசாலை, மாத்தறை –  கிறிஸ்ட் சேர்ச் கல்லூரி, நுவரெலிய- காமினி தேசிய கல்லூரி, மாத்தளை- சுஜாதா வித்யாலயம், காலி- புனித அலோயஸ் கல்லூரி, ஹம்பாந்தோட்ட- சுவி தேசிய பாடசாலை, யாழ்ப்பாணம்- மத்திய கல்லூரி, மட்டக்களப்பு-  இந்துக் கல்லூரி, குருநாகல்- சேர் ஜோன் கொத்தலவல கல்லூரி, மலியதேவ ஆண்கள் கல்லூரி, புத்தளம்- சென் ஆண்ட்ரூஸ் மத்திய கல்லூரி, பாத்திமா பாலிகா மகா வித்யாலயம், ஷீனன் ஆரம்பப்பாடசாலை, அனுராதபுரம் – மத்திய கல்லூரி, பதுளை – மத்திய கல்லூரி,  விசாகா பெண்கள் உயர்பாடசாலை, மொனராகல – ரோயல் கல்லூரி, கேகாலை – ஸ்வார்ணா ஜெயந்தி மகா வித்யாலயா, கேகலு பாலிகா வித்யாலயம்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here