மல்லாகத்தில் நடந்தது என்ன? எப்படி உயிரிழந்தார் இளைஞன்?- வீடியோ, படங்கள்!

மல்லாகம் சகாய மாதா ஆலயத்தின் திருவிழா சமயத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு அனர்த்தத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூடே இந்த அனர்த்தத்திற்கு காரணமாக அமைந்தது. இதில் பாக்கியராசா சுதர்சன் (27) என்பவர் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூட்டின் பின்னணி என்ன?

தற்போது மல்லாகத்தில் சம்பவ இடத்தில் நிற்கும் தமிழ் பக்கத்தின் செய்தியாளர்கள் திரட்டி தகவல்களின் அடிப்படையில், நடந்த சம்பவத்தை தொகுத்துள்ளோம்.

மல்லாகம் சகாய மாதா ஆலயத்தின் திருவிழா இன்று நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், வாள்வெட்டு கும்பலொன்று அங்கு வந்துள்ளது. அது இளவாலையை சேர்ந்த ஒரு குழுவென்றும், ஆவா குழுவென்றும் வேறுபட்ட தகவல்கள் கூறுகின்றன. தற்போதுவரை அதை உறுதிசெய்ய முடியவில்லை.

அந்த குழு ஆலயத்தில் குறிப்பிட்ட ஓரிருவரை தேடியுள்ளது. எனினும், தேடப்பட்டவர்கள் ஆலயத்திற்குள் நின்றுள்ளார்கள்.

எப்படியோ இரண்டு தரப்பும் ஆலய வாசலில் இரவு 7.30 அளவில் சந்தித்துக்கொள்ள அங்கு மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தில் பொலிசார் அங்கு சென்றுள்ளனர். முற்கூட்டியே கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் பொலிசார் அங்கு சென்றதாக, பொலிஸ் வட்டாரங்கள் சில தமிழ் பக்க செய்தியாளர்களிடம் பேசினார்கள். ஆனால், குரல்தர வல்ல பொலிஸ் அதிகாரிகள் இதை மறுத்துள்ளனர். வழக்கமாக ரோந்து பணியில் ஈடுபட்ட பொலிசாரே வாள்வெட்டு குழுவின் மோதலை அவதானித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

இரண்டு தரப்பின் மோதலின்போது அவர்களை கைது செய்ய முயன்றபோது நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரண்டு தரப்பும் மோதிக்கொண்டிருக்க பொலிசார் அந்த கும்பல் மீது துப்பாக்கிப்பிரயோகம் நடத்தியதாக ஆலயச்சூழலில் நின்ற பொதுமக்கள் கூறுகிறார்கள். எனினும், வாளால் வெட்ட வந்தவர்கள் மீதே துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பொலிசார் கூறுகின்றனர்.

எனினும், உயிரிழந்த இளைஞன் வாள்வெட்டு குழுக்களுடன் சம்பந்தப்பட்டவரே அல்ல, ஆலய திருவிழாவிற்கு வந்தவரே என பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதில் ஒருவர் கொல்லப்பட, இன்னொருவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. எனினும், அவர் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தாரா, வாள்வெட்டு மோதலில் காயமடைந்தாரா என்பதை உடனடியாக உறுதிசெய்ய முடியவில்லை. மல்லாகம் மாவட்ட நீதவான் ஜூட்சன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு விசாரணைக்காக தற்போது சென்றுள்ளார். முதற்கட்ட விசாரணையின் பின்னரே அந்த தகவல் வெளியாகும்.

எனினும், காயமடைந்த மற்றைய நபர் வாள்வெட்டு குழுவை சேர்ந்தவர் என்பதை ஆலயசூழலில் நின்ற பொதுமக்கள் உறுதிசெய்துள்ளனர். அவர் காயம்பட்டு நிலத்தில் விழுந்து உதவிக்குரல் எழுப்பியபோது, அந்தப்பகுதியில் நின்றவர்கள்தான் அவரை மீட்டு உதவியுள்ளனர்.

வாள்வெட்டு குழு மதுபோதையில் இருந்தது என்றும் பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த சம்பவத்தையடுத்து, பொதுமக்களை தேவாலயத்திற்குள்ளேயே பொலிசார் மடக்கினர். யாரையும் வெளியில் வர வேண்டாமென எச்சரித்திருந்தனர்.

பின்னர், இரவு 8.20 அளவில் பொதுமக்களை தேவாலயத்திலிருந்து வெளியேற அனுமதித்ததும், அவர்கள் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்-காங்கேசன்துறை வீதியை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு நீதிபதி ஜூட்சன் வந்தபோதுதான், மறியலை விலக்கி அவரை உள்நுழைய அனுமதித்தனர்.

வாள்வெட்டு கும்பல் வந்ததாக கூறப்படும் மோட்டார்சைக்கிள் இரண்டையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

தற்போது மல்லாகம் சந்திப்பகுதியில் பொலிசாரின் வீதித்தடை ஏற்படுத்தப்பட்டு, யாரும் உள்நுழைய அனுமதிக்கப்படவில்லை. செய்தியாளர்கள் மல்லாகம் சந்தியில் மோட்டார்சைக்கிள்களை நிறுத்திவிட்டு, பிரதான வீதியில் சுமார் நூறு மீற்றர் தொலைவில் உள்ள ஆலயத்திற்கு நடந்தே சென்று செய்தி சேகரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சற்று முன்னர் கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர்- வாள்வெட்டு கும்பல் பொலிசாரை தாக்க முற்பட்டபோதே பதில் தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

பொலிசாரும் மதுபோதையில் இரு

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here