
மட்டக்களப்பு தேர்தல் முறைப்பாட்டுப்பிரிவிற்கு இதுவரை 49 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலகருமான மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.
இதுவரை மட்டக்களப்பில் பெரியளவான சம்பவங்கள் வன்முறைகள் பதிவாகப்படவில்லை இருந்தும் 49 முறைப்பாடுகளில் அனுமதி பெறப்படாமல் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டம் தொடர்பான முறைப்பாடுகளும், ஊடகங்களின் பக்கசார்பான செய்திகளையும் பிரச்சாரங்களையும் முன்னேடுத்தமை, அத்தோடு முகநூல் மூலமாக அரசாங்க உத்தியோகத்தர்கள் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டமைக்கு எதிரான முறைப்பாடுகள் ,அனுமதியின்றி பதாகைகள் அமைத்தமைக்கும் எதிரான முறைப்பாடும் சில உத்தியோகத்தர்கள் தேர்தல் அறிவிப்பிற்கு பின்னர் இடமாற்றங்கள் வழங்கப்பட்டமைக்கு எதிராகவும் வாகனங்கள் சொத்துக்கள் வழங்கல்,பொருட்கள் விநியோகம் போன்றன தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகி வருகின்றது.
கிடைக்கப்பட்ட முறைப்பாடுகளில் கிட்டதட்ட 35 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய முறைப்பாடுகளுக்கு விரைவான தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் தேர்தல் முறைப்பாட்டுப்பிரிவு எடுத்துவருகின்றதாகவும் தெரிவத்தாட்சி அலுவலர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.
ஏறாவூர், மட்டக்களப்பு,காத்தான்குடி,வாழைச்சேனை,பட்டிப்பளை , வெல்லாவெளி ஆகிய பொலீஸ் பிரிவுகளில் அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான வன்முறைகள் , உயிர் இழப்புக்கள், பொருட் சேதங்கள் ஏற்பட்டதாக இதுவரை முறைப்பாட்டு பிரிவில் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
