யாழில் அதிகாலை கோர விபத்து; உதவாமல் சென்ற வாகனங்கள்: குடும்பஸ்தர் துடித்துப்பலி!


யாழ்ப்பாணத்தில் இன்று (14) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கைதடி, நுணாவில் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில், மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தரை டிப்பர் வாகனம் மோதித்தள்ளியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

குருநகர், கனகசிங்கம் வீதியை சேர்ந்த எம்.லக்கி (42) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தார்.

தனியார் பாதுகாப்பு சேவையின் மேற்பார்வையாளரான இவர், நிறுவன காவல் கடமைகளை மேற்பார்வை செய்ய இன்று அதிகாலை யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோதே விபத்து நேர்ந்தது.

விபத்தில் சிக்கி, குடும்பஸ்தர் படுகாயமடைந்ததும், 119 அவசர நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்தபோதும், நோயாளர் காவு வண்டி வரவில்லையென சம்பவ இடத்தில் நின்றவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பின்னர் வீதியால் சென்ற வாகனங்களை மறித்து உதவிகோர முயன்றபோதும், வாகனங்களும் நிற்கவில்லையென்று தெரிவித்தனர்.

இதனால் மிக தாமதமாகவே, காயமடைந்தவரை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லும் வழியில் அவர் உயிரிந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here