யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் மரணம்!

இரண்டாம் இணைப்பு

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து சகாய மாதா ஆலயத்தில் பெருநாளில் கலந்துகொண்ட மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் மல்லாகம் சகாய மாதா கோவிலடியில் வீதி போக்குவரத்து தடைப்பட்டதுடன் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தையடுத்து தெல்லிப்பளை மற்றும் சுன்னாகம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் இரு குழுக்களுக்கிடைய மோதல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கும் நிலையில் அதனை பொது மக்கள் மறுக்கின்றனர்.

பெருநாளில் பங்கேற்ற இளைஞர்கள் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணத்தில் இன்று இரவு பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மல்லாகம் சந்தியில் சற்று முன்னர் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மல்லாகம் சகாய மாதா தேவாலாய திருவிழாவில் இரு கும்பல்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலைத் தடுக்க முற்பட்ட போது, பொலிஸார் மீது வாள்வெட்டு நடத்த முன்ற இளைஞனே சுட்டுக்கொல்லப்பட்டார் என்று பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இளைஞர் உயிரிழக்கவில்லை, துப்பாக்கிச்சூட்டில் சூட்டில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவிக்கின்ற போதும்,  அவர் உயிரிழந்து விட்டார் என்பதை வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிசெய்துள்ளன.

ஏழாலையைச் சேர்ந்த பாக்கியராசா சுதர்சன் (வயது 27) என்ற இளைஞனே நெஞ்சில் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார்.

தற்போது வரை மக்களை தேவாலயத்திற்குள்ளேயே பொலிசார் முடக்கி வைத்துள்ளனர். கொல்லப்பட்டவர் ஆவா குழு உறுப்பினர் என முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

மேலதிக விபரங்கள் இணைக்கப்படும்.

படம்- நியூமன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here