வறட்சியால் 200 யானைகள் பலி!


சிம்பாப்வேயில் நிலவும் கடுமையான வறட்சியால், அந்நாட்டில் உள்ள வாங்கே தேசிய பூங்காவில் 200க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தன.

இது தொடர்பாக அந்நாட்டின் உயிரியல் பூங்காவின் செய்தி தொடர்பாளர் பரோவோ கூறுகையில்:-

ஒக்டோபர் மாதத்தில் பெய்ய வேண்டிய பருவமழை பொய்த்துவிட்டதால் நாட்டில் கடுமையான வறட்சி நிலவும் காரணமாக, நாட்டில் உள்ள விலங்கியல் பூங்காக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பூங்காவில் உள்ள ஒட்டகச்சிவிங்கி, காட்டெருமை, மான் இனங்கள் என அனைத்து விலங்கினங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. சில பறவை இனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை பெய்தால் மட்டுமே நிலைமை மேம்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தண்ணீர் நிரம்பி காணப்பட்ட நீர்நிலைகள் தற்போது வறண்டு காணப்படுகின்றன. தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட பூங்காவில் உள்ள விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடின அலைந்து வந்தன.

இந்நிலையில் கடுமையான வறட்சி காரணமாக சிம்பாப்வேயில் நாட்டில் உள்ள வாங்கே தேசிய பூங்காவில் உணவு கிடைக்காமல் 200க்கும் மேற்பட்ட யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

இதனையடுத்து சிங்கங்கள், காட்டு நாய்கள், 50 காட்டெருமைகள், 40 ஒட்டசிவிங்கிககள், 2000 யானைகளை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here