அரச அதிகாரிகளுடன் விஷேட கலந்துரையாடல்

டெங்கு நுளம்பு பரவும் அபயாம் நாட்டில் காணப்படுவதால் அதனை ஊவா மாகாணத்தில் தடுக்கும் நோக்கில் சொர்க்கத்தை உருவாக்கும் தலைமுறை என்ற வேலைத்திட்டத்தை ஊவா மாகாண ஆளுநர் ஆரம்பித்துள்ளார்.அதற்கமைய அவ்வேலைத்திட்டம் தொடர்பாக ஊவா மாகாண அமைச்சின் செயலாளர்கள்,நகர சபை முதல்வர்கள் மற்றும் பிரதேச சபை தலைவர்களுடன் விசேட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இதன் போது கழிவு முகாமைத்துவம் மற்றும் டெங்கு நுளம்பு பரவும் அபாயம் காணப்படும் பகுதிகளை கண்டறிதல் தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றது.அத்துடன் ஊவா மாகாணத்தில் உள்ள தொண்டு நிறுவங்கள் , பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்புடன் அப்பகுதிகளை சுத்திகரித்து அவ்வபாயத்தை தவிர்போம் என ஆளுநர் தெரிவித்தார்.

மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here