மீண்டும் பிக் பாஸில் ஓவியா!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 16 பேர் யார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி இன்று ஆரம்பமாகிறது. நிகழ்ச்சியை இரவு 7 மணிக்கு பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று விட்டார்களாம்.

பிக் பாஸ் வீட்டிற்குள் கமல் ஹாஸன் இருக்கும் ஒளிப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 16 போட்டியாளர்கள் யார், யார் என்று தெரிந்துவிட்டது. இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டை கலகலப்பாக்க பவர் ஸ்டார், கவர்ச்சிப் புயல் வீச வைக்க மும்தாஜ், இருட்டு அறையில் முரட்டுக் குத்து நடிகை யாஷிகா ஆனந்த், ஹோம்லி பெண் ஜனனி ஐயர், பாயும் புலி படத்தில் நடித்த ஐஸ்வர்யா தத்தா, மெட்ராஸ் படத்தில் நடித்த ரித்விகா, தாடி பாலாஜி, அவரின் மனைவி நித்யா, நடிகர் மகத் ராகவேந்திரா, டேனியல் போப், ஆனந்த் வைத்யநாதன், சென்ட்ராயன், நிகழ்ச்சி தொகுப்பாளினி ரம்யா, பொன்னம்பலம், மமதி சாரி, வைஷ்ணவி ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

இது இப்படியிருக்க, புதிய திருப்பமாக 17 வது ஆளாக பிக்பாஸ் 2 விலும் நடிகை ஓவியா கலந்து கொள்வதாக கமலே அறிவிக்கும் வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. மேடைக்கு வந்து ரசிகர்களைச் சந்திக்கும் ஓவியா, பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வது போலவும் அந்த வீடியோ அமைந்துள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here