ஓ.எல் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

ஜி.சி.ஈ. சாதாரண தரத்தில் மாணவர்கள் கற்கும் பாடங்களை 6 பாடங்களாக ஆகக் குறைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கான நடவடிக்கைகள், தேசிய கல்வி நிறுவனத்தினூடாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை எதிர்காலத்தில் தொழில் ரீதியான கற்கை நெறிகளுக்காக 26 பாடங்கள் உள்வாங்கப்படவுள்ளன. இதேவேளை, சாதாரண தரப் பரீட்சைகளில் சித்தியடையாவிட்டாலும், குறித்த தொழிற்சார் கல்வி பாடங்கள் மூலம் மாணவர்கள் உயர் தரத்துக்குச் செல்ல முடியும் எனவும் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here