புகையிரதம் மோதி யாழில் ஒருவர் உயிரிழப்பு!


யாழ்ப்பாணத்தில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் இந்து மகளிர் பாடசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள அன்னசத்திர வீதியில்  புகையிரதக் கடவை ஊடாக கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 9 மணியளவில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் பொருளியல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளரான நிசாந்தன் (31) என்று ஒரு பிள்ளையின் தந்தையே விபத்தில் உயிரிழந்தார்.

மீன் வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர், காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த யாழ்தேவி புகையிரதத்துடன் மோதி விபத்திற்குள்ளானார். புகையிரதம் மோதி மோட்டார் சைக்கிளில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.

அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here