சஞ்சய் லீலா பன்சாலியுடன் இணையும் ஜான்வி?

நடிகை ஸ்ரீதேவி தனது மூத்த மகள் ஜான்வியை நடிகையாக திரையில் பார்க்க வேண்டும் என்று ஆசை வெளியிட்டிருந்தார். அவர் உயிருடன் இருந்தபோதே, ‘தடக்’ படத்தில் ஜான்வி ஹீரோயினாக நடிக்கவும் தொடங்கிவிட்டார். அவருக்கான காஸ்டியூம்களை தேர்வு செய்வது, மேக்அப்பில் கவனம் செலுத்துவது என அக்கறையாக கவனித்தும் வந்தார். இதன் படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில்தான் ஸ்ரீதேவி மரணம் அடைந்தார்.

ஜான்வி நடித்து வந்த தடக் படம் தற்போது முடிவடைந்தது. அப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு விட்டது. இந்நிலையில் தனது அடுத்த படம் பத்மாவத் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியது.

ஜான்வி, சஞ்சய் லீலா பன்சாலி அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று தெரிகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here