கல்லூரிக்கட்டணத்தை தொலைத்ததால் மாணவி விசமருந்தி உயிரிழப்பு!

திருவையாறு அருகே கல்லூரி கட்டணத்தை தொலைத்ததால் மன முடைந்த மாணவி விஷம் அருந்தி உயிரிழந்தார்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கடுவெளி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் (55). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் ஷாமிலி (22). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த வாரம் கல்லூரி கட்டணம் செலுத்த ஷாமிலி தனது தாய் புஷ்பாவிடம் இருந்து ரூ.15 ஆயிரம் வாங்கி சென்றார். இந்த பணத்தை ஷாமிலி தொலைத்து விட்டார்.

மனமுடைந்த அவர் கடந்த 5ம் தேதி வீட்டிலிருந்த எலி மருந்தை (விஷம்) அருந்தி மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஷாமிலி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து புஷ்பா கொடுத்த புகாரின்பேரில் மருவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here