தரு­ம­ முழக்­கம்: முழங்காவிலை தவிடுபொடியாக்கியது தருமபுரம் மகா வித்தியாலயம்!

தரு­ம­ முழக்­கம் துடுப்­பாட்­டத் தொட­ரில் முழங்­கா­வில் மகா வித்­தி­யா­ல­யத்தை தரு­ம­­பு­ரம் மத்­திய கல்­லூரி அணி தோற்­க­டித்­துக் கிண்­ணம் வென்­றது.

முழங்­கா­வில் மகா வித்­தி­யா­லய மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம், நேற்று என்று இரண்டு தினங்­கள் கொண்­ட­தாக இந்த ஆட்­டம் நடை­பெற்­றது.

நாணயச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்ற தரு­ம­பு­ரம் மத்­திய கல்­லூரி அணி களத்­த­டுப்­பைத் தெரிவு செய்­தது. இதன்­படி முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய முழங்­கா­வில் மகா வித்­தி­யா­லய அணி 38.1 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்து 93 ஓட்­டங்­களை மட்­டுமே பெற்­றது. அதி­க­பட்­ச­மாக கிருஸ்­ண­ராஜ் 27 ஓட்­டங்­க­ளை­யும், ஜெயந்­தன் 26 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் ஜது­சன் 5 இலக்­கு­க­ளை­யும், யசிந்­தன் 4 இலக்­கு­க­ளை­யும் வீழ்த்­தி­னர்.

பதி­லுக்­குக் கள­மி­றங்­கிய தரு­ம­­பு­ரம் மத்­திய கல்­லூரி அணி 117 ஓட்­டங்­க­ளுக்­குச் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­தது. டானி­யல் ஆட்­ட­மி­ழக்காது 51 ஓட்­டங்­க­ளைப் பெற்­றார்.

பந்­து­வீச்­சில் டினோ­யன் 5 இலக்­கு­க­ளை­யும், ஜெயந்­தன் 3 இலக்­கு­க­ளை­யும் வீழ்த்­தி­னர்.

தனது இரண்­டா­வது இனிங்ஸை ஆரம்­பித்த முழங்­கா­வில் மகா வித்­தி­யா­லய அணி 5 இலக்­கு­களை இழந்து 32 ஓட்­டங்­க­ளைப் பெற்­றி­ருந்த நிலை­யில் முதல்­நாள் ஆட்­டம் முடி­வுக்கு வந்­தது. அந்த அணி நேற்­றுத் தொடர்ந்து துடுப்­பெ­டுத்­தா­டி­யது. 108 ஓட்­டங்­க­ளைப் பெற்­றி­ருந்த நிலை­யில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­தது. நிதர்­சன் 41 ஓட்­டங்­க­ளை­யும், டினோ­யன் 27 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் யசிந்­தன், யது­சன் இரு­வ­ரும் தலா 4 இலக்­கு­களை வீழ்த்­தி­னர்.

முதல் இன்­னிங்­ஸில் முன்­னிலை பெற்­றமை கைகொ­டுக்க தர்­ம­பு­ரம் மத்­திய மத்­திய கல்­லூரி அணிக்கு 85 ஓட்­டங்­களே இலக்­காக நிர்­ண­யிக்­கப்­பட்­டது. அந்த அணி 2 இலக்­கு­களை இழந்து 8 இலக்­கு­க­ளால் வெற்­றி­பெற்­றது.

ஆட்­ட­நா­ய­க­னா­க­வும், சக­ல­துறை வீர­ரா­க­வும் தரு­ம­­பு­ரம் மத்­திய கல்­லூரி அணி­யின் டானி­யல் தெரி­வா­னார். சிறந்த களத் தடுப்­பா­ள­ராக முழங்­கா­வில் மகா­வித்­தி­யா­லய அணி வீரர் டினோ­ஜன் தெரி­வா­னார். சிறந்த பந்­து­வீச்­சா­ள­ராக தரு­ம­­பு­ரம் மத்­தி­ய­கல்­லூரி வீரர் யசிந்­தன் தெரி­வா­னார். சிறந்த பந்­து­வீச்­சா­ள­ராக தரு­ம­பு­ரம் மத்­தி­ய­கல்­லூரி வீரர் யது­சன் தெரி­வா­னார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here