ஆப்கானை வெள்ளையடித்தது மேற்கிந்தியத்தீவுகள்!

ஷாய் ஹோப்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றிபெற்றது.

மேற்கிந்தியத் தீவுகள் – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி உத்தபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் நேற்று நடந்தது.

‘ரொஸ்’ வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அஸ்ஹார் ஆப்கன் 86 ரன்னும், ஹஸ்ரத்துல்லா ஜஜாய் 50 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். முகமது நபி 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கீமோ போல் 3 விக்கெட்டும், அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 48.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் 145 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 109 ரன்னும், ரோஸ்டன் சேஸ் 32 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 42 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

ஷாய் ஹோப் ஆட்டநாயகன் விருதையும், ரோஸ்டன் சேஸ் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஒருநாள் போட்டி தொடரை 3-0 என்ற கணக் கில் முழுமையாக கைப்பற்றியது. அடுத்து இவ்விரு அணிகள் இடையிலான மூன்று 20 ஓவர் போட்டியில் முதலாவது போட்டி லக்னோவில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here