‘நீங்கள் வெர்ஜினா?’: பிரபல நடிகையை கடுப்பாக்கிய கேள்வி!


விஜய்யின் குருவி படத்தில் அறிமுகமான நிவேதா தோமஸ் ‘நவீன சரஸ்வதி’ படத்தில் கதாநாயகி ஆனார். விஜய்யின் ஜில்லா, கமல்ஹாசனின் பாபநாசம் மற்றும் போராளி படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் வந்தார். தற்போது ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.

இதில் ரஜினியின் மகளாக அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நிவேதா தாமஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். சில ரசிகர்கள் மோசமான கேள்விகளை எழுப்பினர்.

உங்கள் திருமணம் எப்போது? ஆண் நண்பர்கள் இருக்கிறார்களா? நீங்கள் வெர்ஜினா? என்றெல்லாம் கேள்விகள் கேட்டனர். அதில் சில கேள்விகள் ஆபாசமாகவும் மோசமாகவும் இருந்தன. இதனால் அதிர்ச்சியான நிவேதா தாமஸ் அவர்களுக்கு சமூக வலைத்தளத்தில் அறிவுரை வழங்கினார்.

இது போன்று சமூக வலைத்தளங்களில் மட்டமான கேள்விகளை கேட்கும் ரசிகர்களுக்கு செருப்படி போன்று உள்ளது இந்த பதில். நீங்கள் சக மனுஷியுடன் பேசிக் கொண்டிருப்பதை புரிந்துகொள்ளுங்கள். மரியாதையும் மற்றும் கண்ணியத்துடன் பேசுங்கள் என்று தைரியமாக பதிவிட்டுள்ளார்.

இதுமட்டுமல்லாமல் என்னுடன் ரசிகர்கள் நேரத்தை செலவிடுவதற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு சினிமாவில் பெண்களின் தைரியத்தை வெளிப்படுத்தும் விதமாக இருக்கிறது.

இதே போன்று நடிகை ராஷ்மிகா ரசிகர்களின் கேள்விகளுக்கு தைரியமாக பதிலளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here